மூன்று வகையான கல்லீரல் நோய்களும்... அதை சரிசெய்யும் சில கை வைத்தியங்களும்...

Posted By:
Subscribe to Boldsky

உடலிலேயே கல்லீரல் மிகப்பெரிய உறுப்பு மற்றும் பல்வேறு முக்கிய பணிகளையும் செய்யக்கூடியது. இதில் தான் உணவை செரிப்பதற்கு தேவையான பித்த நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கல்லீரல் இரத்தத்தில் உள்ள கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும் சர்க்கரை போன்றவற்றை சீராக வைத்துக் கொள்ளவும் செய்கிறது.

Liver Disease Types And Remedies

அதோடு, இது தான் வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் ஹீரோவும் கூட. இதனால் இது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற அயராது உழைக்கிறது. இப்படி பல செயல்களில் முக்கிய பங்கை வகிப்பதால், இதுவும் மெஷின் போல ஒரு கட்டத்தில் நோய் தாக்குதலால் பழுதாகிறது. அதுவும் இந்த கல்லீரலில் மூன்று வகையான நோய்கள் தாக்கும்.

இந்த கட்டுரையில் அந்த மூன்று வகை கல்லீரல் நோய்கள் குறித்தும், அதை சரிசெய்ய உதவும் சில இயற்கை வைத்தியங்கள் குறித்தும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வகைகள்

வகைகள்

கல்லீரலில் மூன்று வகையான நோய்கள் தாக்கும். அவையாவன:

* கொழுப்பு கல்லீரல்

* ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி மற்றும் ஈ (மஞ்சள் காமாலை)

* கல்லீரல் இழைநார் வளர்ச்சி

கொழுப்பு கல்லீரல்

கொழுப்பு கல்லீரல்

கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரல் நோய்க்கான முதல் கட்டமாகும். அதாவது உங்கள் கல்லீரலின் மீது கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதற்கான எச்சரிக்கை மணியாகும். இந்த பிரச்சனை கல்லீரலைச் சுற்றி அதிகளவு கொழுப்புக்கள் தேங்குவதால் வரும் மற்றும் இந்நிலையில் கல்லீரல் வீக்கமடைந்தும் காணப்படும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கொழுப்பு கல்லீரல், டயட் மற்றும் வாழ்க்கை முறையில் உள்ள தவறால் வரும் பிரச்சனையாகும். இந்த பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், திடீர் பசியின்மை, வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி, மிகுந்த களைப்பு மற்றும் அசிடிட்டி போன்ற அறிகுறிகள் தென்படும். உடல் பருமன் அல்லது சர்க்கரை நோயாளிக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கீழே இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கான டயட் மற்றும் வாழ்க்கை முறை டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கான டயட் டிப்ஸ்:

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கான டயட் டிப்ஸ்:

டிப்ஸ் #1

ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதாவது பிரட், அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் சோளம் போன்றவற்றை அளவாக எடுக்க வேண்டும். அதோடு டெசர்ட்டுகள் மற்றும் குளிர் பானங்களை அறவே தொடக்கூடாது.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுக்கவும். அதாவது முழு தானிய வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சரிவிகித அளவில் உட்கொள்ள வேண்டும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்களை தவிர்க்கவும். ஏனெனில் இவை கெட்ட கொழுப்புக்கள். ஆகவே கொழுப்பு நிறைந்த இறைச்சி, கொழுப்பு மிக்க பால் பொருட்கள், எண்ணெயில் வறுத்த உணவுகள் போன்றவற்றை தொடாதீர்கள்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

நல்ல கொழுப்புக்களான மோனோ-அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும். மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளையும் சாப்பிடுங்கள். இந்த கொழுப்புக்கள் நட்ஸ், விதைகள், அவகேடோ, ஆலிவ், சோயா மற்றும் மீன்களில் உள்ளது.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

வைட்டமின் டி மற்றும் ஈ நிறைந்த விதைகள், நட்ஸ், பச்சை இலைக் காய்கறிகள், செரில்கள், முட்டை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

முக்கியமாக சர்க்கரை, உப்பு போன்றவற்றை மிகவும் குறைவாக பயன்படுத்தவும். முடிந்தளவு தவிர்த்திடுங்கள். மாறாக கல் உப்பு, பனங்கற்கண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கான வாழ்க்கை முறை டிப்ஸ்:

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கான வாழ்க்கை முறை டிப்ஸ்:

டிப்ஸ் #1

மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள். இதுவே கல்லீரல் தன்னைத் தானே பழுதுப் பார்க்க பெரும் உதவியாக இருக்கும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம். அதிலும் ஜாக்கிங் அல்லது ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளை தினமும் 30 நிமிடம் மேற்கொள்ளுங்கள்.

ஹெபடைடிஸ்

ஹெபடைடிஸ்

ஹெபடைடிஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துமே கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

இந்த வகை கல்லீரல் நோய் இருந்தால், அதனால் பசியின்மை, களைப்பு, சரும எரிச்சல், வெளிரிய மற்றும் கிரே நிற மலம் வெளியேறுதல், அடிவயிற்றின் வலது பக்கம் பாரமாக இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

வைத்தியம் #1

வைத்தியம் #1

1 டீஸ்பூன் சீரகம் மற்றும் ஓமத்தை வறுத்து, அத்துடன் 1 சிட்டிகை கல் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் நீரில் இந்த பொடியை சிறிது சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் இருவேளை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வைத்தியம் #2

வைத்தியம் #2

1 டேபிள் ஸ்பூன் அதிமதுரப் பொடியில் 2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வைத்தியம் #3

வைத்தியம் #3

கல்லீரல் நோய்களுக்கு பூண்டு மிகச்சிறந்த உணவுப் பொருள். இது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 பல் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கல்லீரல் இழைநார் அழற்சி

கல்லீரல் இழைநார் அழற்சி

இந்த வகை கல்லீரல் நோய் உயிரையே பறிக்கக்கூடியது. இந்த வகையில் கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான திசுக்களும் வடு திசுக்களாகிவிடும். இதனால் கல்லீரலில் இரத்த ஓட்டத்தை தடை செய்து, கல்லீரலின் அளவைக் குறைக்கும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கல்லீரல் இழைநார் அழற்சி இருந்தால், அஜீரண கோளாறு, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். இது தீவிரமாகும் போது, எடை குறைவுடன், கடுமையான வயிற்று வலியையும் அனுபவிக்கக்கூடும். மேலும் வாய் துர்நாற்றம் அதிகமாகும் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக ஆரம்பிக்கும். இன்னும் தீவிர நிலையில், சருமத்தில் ஆங்காங்கு சிவப்பு நிற சிலந்தி போன்ற குறிகள் காணப்படும். அதோடு வயிறு வீங்க ஆரம்பிக்கும்.

வைத்தியம் #1

வைத்தியம் #1

ஒரு டம்ளர் மோரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து குடித்தால், இந்த நோயை எதிர்த்துப் போராடி, கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

வைத்தியம் #2

வைத்தியம் #2

கல்லீரல் இழைநார் அழற்சி உள்ளவர்கள், ஒரு டம்ளர் நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, உப்பு சேர்த்து தினமும் மூன்று முறை குடிப்பதும் நல்லது.

வைத்தியம் #3

வைத்தியம் #3

ஒரு கேரட் மற்றும் ஒரு கையளவு பசலைக்கீரையை அரைத்து ஜூஸ் செய்து, தினமும் 2 முறை குடிப்பது கல்லீரலுக்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Liver Disease Types And Remedies

The three most common liver diseases are Fatty liver, Hepatitis A, B, C, D and E (jaundice) and Cirrhosis. If you observe liver disease symptoms outlined below follow these natural remedies for liver disease.
Story first published: Monday, January 1, 2018, 11:00 [IST]