Latest Updates
-
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...!
திருமண உறவை மிகவும் வலிமையானதாக மாற்றுவது என்பது தம்பதிகளுக்கிடையே இருக்கும் நம்பிக்கைதான். நம்பிக்கை ஒரு உறவை வலிமையானதாகக் கட்டமைப்பதோடு, அதனை மேலும் தூய்மையானதாகவும் மாற்றுகிறது. ஆனால் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் திருமண உறவின் மகிழ்ச்சியையும், புனிதத்தையும் கெடுத்துவிடும்.
திருமணத்திற்கு புறம்பான உறவுகள் பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கின்றன, அதில் ஒருவரின் பிறந்த ராசியும் அடங்கும். ஒருவர் தங்கள் வாழ்க்கைத்துணையை ஏமாற்றுவது என்பது தனிப்பட்ட குணநலன்கள், மனநிறைவு மற்றும் ஒருவரின் வாழ்க்கைமுறை ஆகியவற்றையும் சார்ந்திருக்கிறது. ஆனாலும் அவர்களின் பிறந்த ராசி அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் துடிப்பான ஆற்றலுக்கும், சுறுசுறுப்பான ஆளுமைக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் சாகச குணம் கொண்டவர்களாகவும், வெளிப்படையான இயல்புடையவர்களாக இருப்பதுடன், தங்கள் வாழ்வில் பெரும்பாலும் த்ரில்லிங்கான அனுபவங்களையே விரும்புகிறார்கள். இந்த த்ரில்லிங்கானத் தேவையும், புதிய அனுபவங்கள் மீதான ஈர்ப்பும், சில சமயங்களில் அவர்களைத் திருமண உறவுக்கு வெளியிலும் உற்சாகத்தைத் தேடத் தூண்டக்கூடும். இருப்பினும், அந்த உறவு கொடுக்கும் சிலிர்ப்பைப் பற்றியது மட்டுமல்ல, அவர்கள் சுதந்திரத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர், இந்தச் சுதந்திர வேட்கையானது, நீண்டகால உறவுக்குத் தேவைப்படும் அர்பணிப்பில் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். மிதுன ராசிக்காரர்கள் அனைவருடனும் எளிதில் பழகக்கூடியவர்கள், உரையாடுவதில் சிறந்தவர்கள், மேலும் எப்போதும் சுவராஸ்யமான அனுபவங்களை விரும்புபவர்கள். அவர்கள் இயல்பிலேயே ஆர்வமுள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையில் பன்முகத்தன்மையையும், உற்சாகத்தையும் விரும்புவார்கள். இதனால் அவர்களின் திருமண உறவில் சுவராஸ்யமான அனுபவங்களோ அல்லது அறிவுசார் தூண்டுதல்களோ இல்லை என்று அவர்கள் உணரும்போது, புதிய உறவுகளை நோக்கி நகர்வார்கள். அந்த புதிய உறவு அவர்களுக்கு போதுமான சுவாரஸ்யத்தை தராவிட்டால் அதையும் அவர்கள் உதற தயங்க மாட்டார்கள்.
துலாம்
காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நல்லிணக்கத்தையும் சமநிலையைக் கடைபிடிக்க விரும்புவார்கள். துலாம் ராசிக்காரர்கள் அவர்களின் இராஜதந்திரத்திற்கும், வலுவான நீதி உணர்வுக்கும் புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள். இருப்பினும், அவர்கள் எந்த முடிவிலும் நிலையாக இருக்க முடியாத குழப்பமான மனநிலையையும் கொண்டுள்ளனர். வாழ்க்கையில் சமநிலையைத் தேடிச் செல்லும் இவர்களின் அதீத ஆர்வம், சில சமயங்களில் அவர்களை உணர்வுபூர்வமாகவோ அல்லது காதல் ரீதியாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் உறவில் ஈடுபட வழிவகுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு உறவுகளில் உடல்ரீதியான நெருக்கம் மிகவும் முக்கியம். அவர்கள் உறவுகளில் பேரார்வத்திற்காக நன்கு அறியப்படுகிறார்கள். அவர்களுக்கும் அவர்களின் காதல் துணைக்கும் இடையே சில சமயங்களில் சண்டைகளும், பிரச்சனைகளும் ஏற்படலாம். ஒரு விரக்தியான சூழல் உருவாகலாம், இது அவர்களை உறவுகளில் துரோகத்தை நோக்கி நகர்த்தும். விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகுந்த உற்சாகம் கொண்டவர்கள். அவர்கள் சிறந்த காதலர்கள், அளவில்லாமல் காதலிப்பார்கள். அவர்களால் எளிதில் பொய் சொல்ல முடியும் மற்றும் தங்கள் துணையை எளிதில் நம்ப வைத்துவிடுவார்கள். அவர்கள் ரகசியங்களைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் காரணமாக அவர்கள் தங்கள் காதல் துணைக்குத் துரோகம் செய்வதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












