Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்..
Kollu Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் ரசம் வைப்பீர்களா? அப்படியானால் ஒருமுறை வித்தியாசமான சுவையைக் கொண்ட கொள்ளு ரசத்தை செய்யுங்கள். இந்த ரசம் மிகவும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் தரும்.
குறிப்பாக இந்த ரசம் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அடிக்கடி இந்த ரசத்தை தயாரித்து சூப் போன்று குடித்து வரும் போது, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். முக்கியமாக இந்த ரசம் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த ரசத்தை செய்தால், வாரம் ஒருமுறை செய்து கொடுக்குமாறு வீட்டில் உள்ளோர் கூறுவார்கள்.

உங்களுக்கு கொள்ளு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு தண்ணீர் - 2 கப்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* மிளகு - 1 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/4 டீஸ்பூன்
* கொள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* தக்காளி - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கொள்ளு வேக வைத்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிய எலுமிச்சை அளவு புளியை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு
பிசைந்து வடிகட்டி தனியாக கொள்ளு புளி நீரை வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில், மல்லி விதைகள், வரமிளகாய், மிளகு, சீரகம்,
கொள்ளு பருப்பை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்கள் மற்றும் நறுக்கிய 2 தக்காளியை சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை கொள்ளு நீருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் 1 1/2 கப் நீரை ஊற்றி கைகளால் நன்கு
கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரசம் தாளிப்பதற்கு 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 1/4 டீஸ்பூன்
வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாயை உடைத்து சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள கொள்ளு கரைசலை ஊற்றி, லேசாக
நுரைக்கட்ட தொடங்கும் போது, நறுக்கிய கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலையை சேர்த்து கிளறி, ஒரு கொதி வந்ததும் இறக்கினால், சுவையான
கொள்ளு ரசம் தயார்.



Click it and Unblock the Notifications