Latest Updates
-
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்!
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவுள்ளது மற்றும் தேர்தல் முடிவுகளானது மே 04 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், பல கட்சி தலைவர்களும், தேர்தல் பிரச்சாரங்களை நடத்த பல ஊர்களுக்கு அலைய வேண்டியிருக்கும்.
சொல்லப்போனால் அடுத்த ஒருமாத காலம் மிகவும் பரபரப்பாக இருக்கும். இக்காலத்தில் பொதுமக்களின் கவனம் தேர்தல் பிரச்சார உத்திகள் மற்றும் வாக்குறுதிகள் மீது மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கியத் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் மீதும் இருக்கும்.

உணவு என்பது கலாச்சாரம் மற்றும் அடையாளத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ள ஒரு மாநிலத்தில், அரசியல்வாதிகளின் உணவுப் பழக்கவழக்கங்கள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடனான அவர்களின் தொடர்பைப் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன. சுவாரஸ்யமாக, தமிழ்நாட்டின் பல முக்கியத் தலைவர்கள் நவீன அல்லது ஆடம்பரமான உணவு முறைகளுக்குப் பதிலாக, எளிமையான, வீட்டு உணவுகளைத் தேர்ந்தெடுத்து, பாரம்பரிய தமிழ் உணவுகளை இன்று வரை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தினமும் பாரம்பரிய தமிழ் உணவுகளையே உட்கொண்டு, ஒரு எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்காகப் பரவலாக அறியப்படுகிறார். இவர் பல நேர்காணலில் தனது தினசரி உணவில் சாதம், சாம்பார், ரசம், கீரை பொரியல் மற்றும் பல்வேறு காய்கறி குழம்புகள் நிறைந்த பாரம்பரிய உணவுகளை உண்பதாக கூறியுள்ளார்.
இந்த வகை உணவுகள் சத்தானவை மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இப்படி எளிமையான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அவர் மக்களுடன் எளிதில் ஒன்றிப்போகும் தன்மை மற்றும் கலாச்சாரப் பெருமிதம் கொண்ட ஒரு பிம்பத்தை வெளிப்படுத்துகிறார்.
எடப்பாடி கே. பழனிச்சாமி
தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவரான அதிமுகவின் பொது செயலாளரான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களும் வீட்டில் சமைத்த உணவுகளுக்கே அதிக முன்னுரிமை அளிப்பவராக அறியப்படுகிறார். இவர் விவசாய பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், பாரம்பரிய உணவுகளின் மீதான இவரது நாட்டம் அவரது கிராமப்புற வேர்களைப் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாட்டின் கிராமப்புற உணவுகளான கஞ்சி, ராகி களி, கீரை, மோர் போன்றவை ஆரோக்கியமானவையாகவும், இன்றும் பல வீடுகளில் உட்கொள்ளப்பட்டு வரும் உணவு பழக்கங்களுக்கு ஏற்றவையாக எளிமையாகவும் உள்ளன. இப்படியான இவரது உணவுப் பழக்கங்களானது, எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் எளிமையான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
ஓ. பன்னீர்செல்வம்
மற்றொரு மரியாதைக்குரிய தமிழக தலைவர்களுள் ஒருவர் தான் ஓ. பன்னீர்செல்வம். இவரும் எளிமையான வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்கங்களுக்காக அறியப்படுகிறார். இவருக்கும் வீட்டில் சமைத்த உணவுகளையே விரும்புவதாக கூறப்படுகிறது. இப்படியான உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாரம்பரிய விவசாயத்திற்கும் ஆதரவளிக்கின்றன.
ஜங்க் உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் பெருகி வரும் தற்போதைய காலத்தில், இந்தத் தலைவர்கள் சத்தான, வீட்டு முறை சமையலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
பாரம்பரிய தமிழ் உணவுகளின் நன்மைகள்
பாரம்பரிய தமிழ் உணவுகள் சமச்சீரானவை மற்றும் மிகவும் சத்தானவை. ஏனெனில் இந்த உணவுகளில் பெரும்பாலும் சாதம், பருப்பு, காய்கறிகள், கீரைகள், தயிர், ஊறுகாய் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதுவும் இந்த உணவுகளானது வாழை இலையில் பரிமாறப்படுவது தான் இதன் சிறப்பே. இதனால் உணவுகள் எளிதில் ஜீரணமாவதோடு, உடலுக்கு தேவையான சத்துக்களையும் வழங்குகின்றன. இதனால் அரசியல்வாதிகள் போன்ற பரபரப்பான வேலை செய்பவர்களுக்கு நமது பாரம்பரிய உணவுகள் ஏற்றவையாக உள்ளன.
பண்பாட்டு அடையாளம் மற்றும் மக்கள் தொடர்பு
ஆரோக்கிய நன்மைகளைத் தாண்டி, பாரம்பரிய உணவைத் தேர்ந்தெடுப்பது கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. உணவு என்பது தமிழ் பண்பாட்டு அடையாளத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும் அதை ஏற்றுக்கொள்வதன் மூலம், தலைவர்கள் மக்களிடையே பெருமிதம் மற்றும் சொந்தம் என்ற உணர்வை வலுப்படுத்துகிறார்கள்.
பண்டிகை காலம் அல்லது நல்ல நாட்களில் வாழை இலையில் சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, அல்லது எளிமையான வீட்டு உணவுகளைச் சுவைப்பதாக இருந்தாலும் சரி, இந்தப் பழக்கவழக்கங்கள் பாரம்பரியத்தின் மீதான ஆழ்ந்த மரியாதையை அடையாளப்படுத்துகின்றன. இந்தக் கலாச்சாரப் பிணைப்பு, அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி, அவர்களை எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், இயல்பானவர்களாகவும் காட்டுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

