Latest Updates
-
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 மார்ச் 22 ஆம் தேதி முதல் 2026 மார்ச் 28 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிலுவையில் உள்ள வேலைகளையும் எதிர்பார்த்தபடி முடிப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். ஆனால் இந்த வாரம் சனி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணியிடத்தில் வாக்குவாதங்களில் ஈடுபட்டு, பிரச்சனை சந்திக்க நேரிடும். எனவே இந்நாட்களில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான ஆசை அதிகரிக்கும். இந்த வாரம் சிறந்த பலனைப் பெற, புதன்கிழமையில் ஏழைக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் உங்கள் வேலையில் பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிலர் வேலையை மாற்ற திட்டமிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். அரசியலில் இருப்பவர்கள் இந்த வாரத்தில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் சில விஷயங்கள் நன்றாக நடக்கும். ஆனால் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் ஆணவத்தையும், தற்பெருமை கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களாக இருந்தால், இந்த வாரத்தில் உங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். அரசியலில் இருப்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு வணிக முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மாணவர்கள் தேர்வில் வெற்றியைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசைகள் எழும். இந்த வாரத்தில் நண்பர்கள் பெரிதும் உதவியாக இருப்பார்கள். இந்த வாரம் சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் அதிர்ஷ்டத்தைத் தரும். சிறந்த பலனைப் பெற வியாழக்கிழமையில் கொண்டைக்கடலையை தானம் செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். ஆனால் பணிபுரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் புதிய மாற்றங்களால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் இந்த வாரத்தில் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த வாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்த வாரம் சாதகமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகள் நிறைய சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்றும் எண்ணங்களும் வரக்கூடும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications















