Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Panguni Matha Rasi Palan 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் மார்ச் 14 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இதனால் தமிழ் ஆண்டின் கடைசி மாதமான பங்குனி மாதம் பிறந்தது. இந்த ராசியில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்த பங்குனி மாதத்தில் சூரியனின் நிலையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாக, சற்று மோசமாகவே இருக்கும். இப்போது மார்ச் மாத சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள பங்குனி மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மீனம்
பங்குனி மாதத்தில் மீன ராசிக்காரர்கள் அதிகப்படியான மன அழுத்தங்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற கோபம் மற்றும் பிடிவாதத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல், உடல் சூடு போன்றவற்றால் அவதிப்படக்கூடும். சட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். எனவே இம்மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
பங்குனி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சோதனை நிறைந்த மாதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். தன்னம்பிக்கை குறையும். பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் உங்களின் ரகசியங்களை பகிர வேண்டாம். குடும்ப விஷயங்களில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பங்குனி மாதத்தில் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். வங்கி இருப்பு குறையும். பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் அதிகரிக்கும். இதன் மூலம் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களை மற்றவர்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. இல்லாவிட்டால் வேலையில் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
கன்னி
பங்குனி மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் பண விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பல மோசமான சம்பவங்களை ஏற்படும் வாய்ப்புள்ளது. பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

