Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Panguni Matha Rasipalan 2026: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் மார்ச் 15 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழையவுள்ளார். மீன ராசிக்கு சூரியன் செல்வதால் தமிழ் மாதங்களில் கடைசி மற்றும் 12 ஆவது மாதமான பங்குனி மாதம் பிறக்கிறது.
பங்குனி மாதத்தில் அரச கிரகமான சூரிய பகவான் மீன ராசியில் பயணம் செய்வதால் மீன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மீன ராசியில் சனியோடும், உச்சம் பெற்ற சுக்கிரனோடும் இணைந்து சூரியன் பயணம் செய்யும் இந்த காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று ஜோதிடர் ஜெயலட்சுமி தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். உங்கள் ராசிக்கு பங்குனி மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராஜ கிரகங்கள் கூடி உள்ளதால் உங்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலமாக அமையப்போகிறது. புதிய முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும், சம்பள உயர்வும் தேடி வரும். சந்திராஷ்டம நாட்களில் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சூரியன் மற்றும் சனியால் பண வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மிதுனம்
மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்ற சுக்கிரன், சூரியன், சனி கூட்டணியால் வேலையில் புரமோசன் கிடைக்கும். பதவி யோகம் தேடி வரப்போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் அதிகரிக்கும்.
கடகம்
அஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்ட கடக ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யக்கூடிய ராஜ கிரகங்களினால் ஆன்மீக பயணம் செல்வீர்கள். வருமானம் அதிகமாக இருந்தாலும் கூடவே செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. வியாபாரம், தொழிலில் புதிய முதலீடுகளை கவனத்துடன் கையாளுவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்ற சுக்கிரன், சனியோடு பயணம் செய்கிறார். விபரீத ராஜயோக காலம் என்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகும் மாதம் இது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அஷ்டம சனியின் தாக்கம் சற்றே குறையக்கூடிய கால கட்டமாக உள்ளது. சம்பள உயர்வும், புரமோசனும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் ராஜ கிரகங்கள் கூடியுள்ளன. வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது சிறப்பு. ஆறாம் வீட்டில் ராஜ கிரகங்களின் கூட்டணி உள்ளதால் நோய்கள் நீங்கும், ஆரோக்கியம் மேம்படும். வருமானம் சீராக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் தம்பதியர் இடையே இருந்த விரிசல் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் ராஜ கிரகங்கள் கூடியுள்ளன. பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. சுப காரியம் நடைபெறும். இரவு நேரத்தில் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது அமைதி தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
தனுசு
தனுசு ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியன், சனி உச்சம் பெற்ற சுக்கிரன் இணைந்து பயணம் செய்வதால் வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். நிலம், சொத்து தொடர்பான விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். வீடு,மனை வாங்கும் யோகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் கடின உழைப்பால் வெற்றியை எட்டிப்பிடிப்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் நாதன் சனிபகவானுடன் முயற்சி ஸ்தானத்தில் சூரியன், உச்சம் பெற்ற சுக்கிரன் இணைவது சிறப்பு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் நல்ல செய்தி வரும். வியாபாரம்,தொழிலில் இருந்த போட்டிகள் நீங்கும் .பணம் பல வழிகளிலும் வரும்.
கும்பம்
உங்களின் குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி இணைந்திருப்பது சிறப்பு. பணப்புழக்கம் சீராக இருந்தாலும், சேமிப்பில் கவனம் செலுத்தவும்.உங்கள் பேச்சில் நிதானம் தேவை,வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். ராசியில் பயணம் செய்யும் ராகுவினால் ராஜயோகம் தேடி வரும்.
மீனம்
மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்று பயணம் செய்வது சிறப்பு. சனியோடு, சூரியன் இணைந்து பயணம் செய்வதால் ராஜயோகம் தேடி வரப்போகிறது. உங்களின் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.வாழ்க்கையே போர்க்களமாக இருந்த நிலை மாறப்போகிறது. பணம் பல வழிகளில் இருந்தும் தேடி வரப்போகிறது.



Click it and Unblock the Notifications



