Latest Updates
-
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Panguni Matha Rasipalan 2026 Lucky Zodiac Signs: தமிழ் வருடமான விசுவாவசு ஆண்டின் கடைசி மாதமான பங்குனி மாதம் பிறக்கப் போகிறது. ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் வருகிற மார்ச் 15 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். மீன ராசியில் சூரியன் நுழையும் போது பிறக்கும் மாதம் தான் பங்குனி.

இந்த பங்குனி மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து மிதுன ராசியில் நேர்கதியில் பயணிக்கிறார்.
இந்த குரு பகவானின் நிலையாலும், சூரிய பகவானின் ஆசியாலும் பங்குனி மாதமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் பங்குனி மாதமானது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் பங்குனி மாதமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு விடிவு காலமாக இருக்கும். வேலைகளில் இதுவரை சந்தித்த தடைகள் குருவின் ஆசியால் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக வெற்றியும், செல்வமும் குவியும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உழைப்புக்கான பலன் கிடைக்கும். மொத்தத்தில் பங்குனி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் பங்குனி மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை மாற்றம் அல்லது இட மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இம்மாதத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் பங்குனி மாதமானது சிறப்பாக இருக்கும். குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலில் எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காணக்கூடும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். மொத்தத்தில் பங்குனி மாதம் வாழ்க்கையில் பெரிய நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் மாதமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் பங்குனி மாதமானது வெற்றிகளையும், நிதி ஆதாயங்களையும் தரும் மாதமாக இருக்கும். இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த சிக்கல்கள் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் சந்தித்த பிரச்சனைகள் நீங்கி, சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முக்கியமாக வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
