Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...!
Kerala Style Pepper Chicken Recipe in Tamil: அசைவம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? பெப்பர் சிக்கன் என்பது பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த சிக்கன் ஐட்டமாகும். எப்போதும் ஒரே சுவையில் பெப்பர் சிக்கன் செய்யாமல், ஒருமுறை கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கனை முயற்சி செய்து பாருங்கள். இந்த பெப்பர் சிக்கன் வழக்கமான சுவையில் இல்லாமல் வித்தியாசமான சுவையில் தாறுமாறாக இருக்கும்.
சிக்கனை மிகவும் விரைவாக அதேசமயம் நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த மாதிரி கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் செய்து சாப்பிடலாம். இந்த பெப்பர் சிக்கன் சாதம், பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இப்படி செய்யும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ சிக்கன்
மேரினேட் செய்ய:
- 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
- 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
- அரை ஸ்பூன் உப்பு
மசாலாவிற்கு:
- 2 பெரிய வெங்காயம்(நறுக்கியது)
- 2 ஸ்பூன் இஞ்சி விழுது
- 2 பச்சை மிளகாய் (நீளவாக்கில் கீறியது)
- 1 1/2 ஸ்பூன் மிளகு
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா
- 1/4 ஸ்பூன் சோம்புத் தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா
- 1 ஸ்பூன் சோயா சாஸ்
- 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- சிக்கனை நன்றாக கழுவி அதில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து ஊறவைக்கவும். முழு மிளகை நுணுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி மற்றும் பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பச்சை வாசனை போகும் வரை, சுமார் 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் நுணுக்கிய மிளகு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோம்புத் தூள் மற்றும் சிக்கன் மசாலாவை சேர்க்கவும்.
- கலவையை நன்றாகக் கலந்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- 1/4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாகக் கலக்கவும். மேரினேட் செய்த சிக்கனை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கி, மசாலா சிக்கனுடன் நன்றாக கலக்கும் படி கிளறவும்.
- சிக்கனின் நிறம் மாறத் தொடங்கியதும், 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- கலவை நன்றாக கொதிக்கும் போது நெருப்பை மிதமாக வைத்து, பாத்திரத்தை மூடி, சிக்கன் முழுமையாக வேகும் வரை சமைக்கவும்.
- சிக்கன் வேகும்போது இடையிடையே அவ்வப்போது கிளறிவிடவும். தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். சிக்கன் வெந்ததும், மூடியை அகற்றி, சிறிது கறிவேப்பிலை சேர்த்து, மிதமான தீயில் மேலும் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
- சிக்கன் நன்றாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்தால் காரசாரமான கேரளா சிக்கன் பெப்பர் சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications