For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க பீர் குடிப்பீங்களா? அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...

சமீபத்தில் ஒரு ஆய்வில் கொசுக்கள் பீர் குடிப்போரை அதிகம் கடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் 354 மில்லிலிட்டர் பீர் குடிப்போர் பூச்சிகளை அதிகம் கவர்ந்திழுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

|

மழை இல்லையே என்று வருத்தம் கொண்ட நமக்கு தற்போது வருண பகவான் அவ்வப்போது மழை பெய்யச் செய்கிறான். இதனால் வெப்பத்தால் வெந்து கொண்டிருந்த நமக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் மழைக்காலத்தில் கொசுக்களின் தொல்லை அதிகம் இருக்கும். ஏனெனில் மழை நீரின் தேக்கத்தினால் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும்.

Mosquitoes Love Biting Beer Drinkers

கொசு இனப்பெருக்கத்தால், அதிக கொசுக் கடியால் அவஸ்தைப்படக்கூடும். கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனென்றால் கொசுக்களின் மூலம் பல அபாயகரமான நோய்கள் பரவும். முக்கியமாக டெங்கு, மலேரியா போன்ற மோசமான காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்படுவார்கள்.

இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...

சரி, கொசுக்கள் யாரை அதிகம் கடிக்கும் என்று தெரியுமா? அது தெரிந்தால், நிச்சயம் அவர்கள் உஷாராகிக் கொள்ளலாம் அல்லவா? இக்கட்டுரையில் கொசுக்கள் யாரை அதிகம் கடிக்கும் என்பது குறித்து மேற்கொண்ட ஒரு ஆய்வு குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

நீங்கள் அதிகமாக பீர் குடிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி. சமீபத்தில் ஒரு ஆய்வில் கொசுக்கள் பீர் குடிப்போரை அதிகம் கடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் 354 மில்லிலிட்டர் பீர் குடிப்போர் பூச்சிகளை அதிகம் கவர்ந்திழுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை!

பீர்

பீர்

இந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களால் சந்தேகிப்படுவதற்கு முக்கிய காரணம், குடிப்பழக்கம் வியர்வையில் எத்தனால் சுரப்பை அதிகரிப்பதால் இருக்கலாம் அல்லது உடல் வெப்பநிலை அதிகரிப்பதால் இருக்கலாம் என்று வாஷிங்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் இது மட்டுமே கொசுக்கள் ஒருவரை அதிகம் கடிப்பதற்கு காரணமாக உள்ளது என்பதில்லை, வேறு சிலவும் உள்ளன.

வேறு சில காரணிகள்

வேறு சில காரணிகள்

கொசுக்கள் வேறுசில காரணிகளைக் கொண்டும் கடிப்பதாக சொல்லப்படுகிறது. அதில் இரத்த வகை, மெட்டபாலிசம், கர்ப்ப காலத்தில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீடு போன்றவைகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஸ்மித்சோனியன் இதழ்

ஸ்மித்சோனியன் இதழ்

ஸ்மித்சோனியன் இதழில் கொசுக்கள் எவ்வாறு வியர்வையில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் பிற பொருட்களை மணம் செய்யக்கூடியவை என்பதையும், மேலும் அதிக உடல் வெப்பநிலையைக் கொண்ட உடலைத் தாக்குகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன.

எச்சரிக்கை! இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா?

எவ்வாறு?

எவ்வாறு?

ஸ்மித்சோனியன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொசுக்கள் A இரத்த வகையினரை விட O இரத்த வகையினரையே அதிகம் தாக்குவதாகவும், மேலும் இவை அதிக கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடப்படும் உடலாலும் ஈர்க்கப்படுகின்றனவாம். அதுமட்டுமின்றி, கொசுக்கள் இந்த வாயுவை 164 அடி தூரத்தில் இருந்தே நுகரக்கூடிய திறனைக் கொண்டுள்ளதாம்.

கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள்:

கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள்:

* மலேரியா

* டெங்கு காய்ச்சல்

* சிக்குன்குனியா

* ஜிக்கா காய்ச்சல்

* நிணநீர் யானைக்கால் நோய்

* ஜப்பானிய மூளை அழற்சி

இவையே கொசுக்கடியால் மக்களிடையே பரவக்கூடிய ஆபத்தான நோய்களாகும்.

மரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை!

கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான சில இயற்கை வழிகள்:

கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான சில இயற்கை வழிகள்:

எலுமிச்சை மற்றும் கிராம்பு

முதலில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதன் மேல் சில கிராம்புகளை சொருக வேண்டும். இப்படி செய்யப்பட்ட எலுமிச்சையை வீட்டில் கொசுக்கள் வரும் இடங்களில் ஆங்காங்கு வைத்தால், கொசுக்கள் வராமல் தடுக்கலாம்.

வேப்பிலை மற்றும் லாவெண்டர் எண்ணெய்

வேப்பிலை மற்றும் லாவெண்டர் எண்ணெய்

வேப்பிலை மருத்துவ குணம் அதிகம் வாய்ந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இத்தகைய வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் நல்ல மணம் கொண்ட லாவெண்டர் எண்ணெயை சரிசம அளவில் கலந்து, சருமத்தின் மீது தடவிக் கொண்டால், கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

துளசி

துளசி

வீட்டின் உள்ளே துளசி செடியை வளர்ப்பதன் மூலம், கொசுக்கள் வீட்டிற்கு வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் துளசியில் இருந்து வெளிவரும் மணமானது கொசுக்களை வீட்டினுள் வராதவாறு தடுக்குமாம்.

இந்தியர்கள் அதிகம் அவஸ்தைப்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை தெரியுமா?

பூண்டு

பூண்டு

சில பூண்டு பற்களைத் தட்டி, நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டினுள் தெளித்து விட்டால், கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்கும்.

கற்பூரம்

கற்பூரம்

ஒரு சிறு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதனுள் சில கற்பூரங்களைப் போட்டு, கொசுக்கள் நுழையும் இடங்களான வீட்டு ஜன்னலில் வைத்தால், கொசுக்கள் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mosquitoes Love Biting Beer Drinkers

Now beer drinkers should be careful as drinking just a little of it could also attract mosquitoes, this comes from a new study. Read on...
Desktop Bottom Promotion