For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் வயித்துல இதெல்லாம் சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...

ஊறுகாய், புளி, ஆரஞ்சு, மாங்காய், நெல்லிக்காய், தயிர் மற்றும் லெமன் ஜூஸ் போன்றவற்றை அதிகமாக சாப்பிடும் போது உங்களுக்கு வயிற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

|

உணவின் சுவை விதவிதமாக இருக்கிறது. சிலருக்கு காரமான உணவுகள் என்றால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். சிலருக்கு இனிப்பு பொருட்களைப் பார்த்தால் போதும் வாயில் போடாமல் இருக்க மாட்டார்கள். அதே மாதிரி தான் சிலருக்கு புளிப்பு சுவை என்றால் போதும் நாவை சொட்டை போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இப்படி அதிகமாக புளிப்புச் சுவை எடுப்பது நம் வயிற்று நலனை பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

Can Sour Food Addiction Cause Stomach Ailments?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல உணவும் கூட நஞ்சு தான். எனவே எதையும் சாப்பிடுவதற்கு முன் அதைப் பற்றிய முழுமையான தகவலை தெரிந்து கொள்வது நல்லது. ஆனால் நாம் என்ன பண்ணுகிறோம் யாராவது எதையாவது சொன்னால் போதும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற ஆரம்பித்து விடுவோம். குறிப்பாக எடை இழப்பு என்று வரும் போது நிறைய பேர்கள் எலுமிச்சம் பழத்தை சாப்பிடுகின்றனர்.

MOST READ: நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க...

ஏன் தங்களுடைய வாயு மற்றும் அஜீரணக் கோளாறுகளைக் களையக் கூட நிறைய பேர் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஊறுகாய், புளி, ஆரஞ்சு, மாங்காய், நெல்லிக்காய், தயிர் மற்றும் லெமன் ஜூஸ் போன்றவற்றை அதிகமாக சாப்பிடும் போது உங்களுக்கு வயிற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் புளித்த உணவுகள் வயிற்று வலி மற்றும் வயிற்று தொற்றுக்கு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Sour Food Addiction Cause Stomach Ailments?

Can sour food addiction cause stomach ailments? Read on to know more...
Desktop Bottom Promotion