For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா?

குடிப்பழக்கம் என்பது உடல் நலத்திற்கு மிகவும் கேடான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். குடிச்சா போதை ஏறி திண்டாடுபவர்களும் உண்டு. ஆனால் சில பேருக்கு குடிக்காமலேயே போதை ஏற்படுமாம். இது ஒரு வகை நோய்க்க

|

குடிப்பழக்கம் என்பது உடல் நலத்திற்கு மிகவும் கேடான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். குடிச்சா போதை ஏறி திண்டாடுபவர்களும் உண்டு. ஆனால் சில பேருக்கு குடிக்காமலேயே போதை ஏற்படுமாம். இது ஒரு வகை நோய்க்குறி என்கிறார்கள் மருத்துவர்கள்.

Auto Brewery Syndrome: Is It Possible To Brew Alcohol In The Stomach?

பொதுவாக குடிப்பழக்கத்தில் இருப்பவர்கள் அல்லது குடிப்பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த ஆட்டோ மதுபான நோய்க்குறியால் பாதிக்கப்படுகிறார்கள். இது ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் கூட குடிக்காவிட்டாலும் குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டுவார்களாம். அதைப் பற்றிய விரிவான தொகுப்பு தான் இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆட்டோ மதுபான நோய்க்குறி

ஆட்டோ மதுபான நோய்க்குறி

குடிப்பழக்க நோய் அதாவது, குடல் நொதித்தல் நோய்க்குறி என்பது மனித உடலில் எண்டோஜெனஸ் எத்தனால் தானாகவே குடலில் நொதித்தல் ஆகிறது. இந்த நொதித்தல் செயல் காரணமாக மது குடித்த போதை அல்லது மயக்கம் உண்டாகிறது.

குடலில் ஏற்படும் எண்டோஜெனஸ் நொதித்தல் குடலில் அதிகளவு எத்தனாலை உற்பத்தி செய்கிறது. இதனால் அந்த நபரின் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளான சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை ஆல்கஹால் ஆக மாற்றுகிறது. இதனால் தான் நாம் மது அருந்தாவிட்டால் கூட மயக்கம் ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு பெண் வாகனம் ஓட்டும் போது மது அருந்தி விட்டு ஓட்டியதாக போலீசார் பிடித்தனர். அவரது இரத்தத்தில் நான்கு மடங்கு ஆல்கஹால் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவரை விசாரித்த போது தான் அவருக்கு ஆட்டோ மதுபான நோய்க்குறி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆட்டோ மதுபான நோய்க்குறியின் காரணங்கள்

ஆட்டோ மதுபான நோய்க்குறியின் காரணங்கள்

இந்த நிலையை கண்டறிவது மிகவும் கடினம். இது அரிதாகவே ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளும் தவறாக கருதப்படுகிறது. இந்த நோய்க்கு ஒரே காரணம் வயிற்றில் அதிகமாக ஈஸ்ட் உற்பத்தி செய்யப்படுவதே ஆகும். ப்ரூவரின் ஈஸ்ட், கேண்டிடா கெஃபிர், கேண்டிடா கிளாப்ராட்டா மற்றும் கேண்டிடா அல்பிகான்ஸ் ஆகிய நான்கு வகையான ஈஸ்ட் டுகள் ஆட்டோ மதுபான நோய்க்குறிகளை உண்டாக்குகிறது.

ஆட்டோ மதுபான நோய்க்குறியின் அறிகுறிகள்

ஆட்டோ மதுபான நோய்க்குறியின் அறிகுறிகள்

ஆட்டோ மதுபான நோய்க்குறியின் பொதுவான அறிகுறிகளாவன:

* மதுபானம் அருந்தாமலேயே மது அருந்தியது போன்ற போதை உணர்வு இருக்கும்

* மிகவும் குறைவான அளவில் மது அருந்தினாலும், சட்டென்று அதிகளவு போதை ஏறும்

இதர அறிகுறிகள்

இதர அறிகுறிகள்

* தலைச்சுற்றல்

* தொடர்ச்சியான தலைவலி

* நீரிழப்பு உணர்வு

* உலர்ந்த வாய்

* இலக்கற்ற குமட்டல் மற்றும் வாந்தி

* களைப்பு

* எதுக்களித்தல்

* நெஞ்செரிச்சல்

* மனம் அலைபாய்வது போன்று தோன்றும்.

* நினைவாற்றல் தொடர்பான சிக்கல்கள்

விளைவுகள்

விளைவுகள்

* எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி

* நாள்பட்ட சோர்வு

* கவலை மற்றும் மனச்சோர்வு

ஆபத்து

ஆபத்து

* பெரியவர்கள் சிறியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. ஒருவரின் ஆரோக்கியத்தை பொறுத்தே இது பாதிப்பை ஏற்படுத்தும்.

* பிறக்கும் போதே இந்த நோய்க்குறி தோன்றவில்லை. ஆனால் சில தூண்டுதல்களால் இது உருவாகிறது.

* சில சமயங்களில் முறையற்ற கல்லீரல் செயல்பாட்டால் இது ஏற்படுகிறது. உடலில் இருந்து கல்லீரலால் ஆல்கஹாலை வெளியேற்ற முடியவில்லை என்றால் கூட ஒரு நிமிடத்தில் குடலில் ஈஸ்ட்டுகள் பெருகத் துவங்கிவிடும். இப்படி ஈஸ்ட்டுகள் பெருகுவதால் மயக்கம் அல்லது போதை ஏற்படுகிறது. ஏன் மூன்று வயது சிறுமிக்கு கூட பழச்சாறு குடித்த பிறகு இந்த நோயால் போதை ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Auto Brewery Syndrome: Is It Possible To Brew Alcohol In The Stomach?

Have you ever heard of an incident where alcohol is produced in the gut of a person? This rare medical condition is known as Auto Brewery Syndrome.
Desktop Bottom Promotion