For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த காரணங்களுக்காக மார்பக புற்றுநோய் வரும் என்று தெரியுமா?

|

பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். பெண்களுக்கு மட்டுமின்றி மிகவும் அரிதாக ஆண்களுக்கும் இந்த புற்றுநோய் ஏற்படக்கூடும். இந்த புற்றுநோய் ஏற்படும் போது, மார்பக பகுதியில் கட்டி ஒன்று உருவாகும். இதனால், மார்பகத்தில் இருந்து ரத்த கசிவு ஏற்படும். மேலும், மார்பகத்தின் வடிவத்தை இது மாற்றிவிடும். இதற்கான மருத்துவம், நோயின் தாக்கத்தை பொறுத்து மாறுபடும். கீமோதெரபி, கதிரியக்கம், ஹார்மோன் தெரபி மற்றும் அறுவை சிகிச்சை இதற்கான சிகிச்சை முறைகளாக கையாளப்படுகிறது. மார்பக புற்றுநோயில் 2 வகை உள்ளது. இது பரவக்கூடிய மற்றும் பரவாதவை ஆகும். பரவக்கூடிய மார்பக புற்றுநோயில் புற்றுநோய் கட்டியானது, மார்பகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். மற்றொரு வகை பிற பகுதிகளுக்கு பரவாதவை.

ஆண்டு தோறும், அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் குறித்த முழு விழிப்புணர்வையும், அதற்கான உரிய சிகிச்சை முறைகள் உள்ளது என்பது குறித்தும் எடுத்துரைத்து, நோய் தாக்கத்தில் இருந்து விடுபட உரிய வழிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த கட்டுரையில், மார்பக புற்றுநோய் குறித்த சில தகவல்களை விழிப்புணர்வு நோக்கத்துடன் பகிர்ந்துள்ளோம். வாருங்கள் அவற்றை பற்றி சற்று விரிவாக தெரிந்து மார்பக புற்றுநோயில் இருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

What Causes Breast Cancer?

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான முழுமையாக காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், இந்த வகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை சில காரணிகள் அதிகப்படுத்துவது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்கள்

பெண்கள்

பெண்ணாக பிறந்தவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாகவே உள்ளது. ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது 100 சதவிகிதம் அதிகமாக உள்ளது.

வயதானவர்கள்

வயதானவர்கள்

மார்பக புற்றுநோயை பொறுத்தவரை வயதானவர்களுக்கு ஏற்படுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. கிட்டதட்ட, 50 வயதை எட்டிய சுமார் 75 சதவிகித பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 50 முதல் 74 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படுவதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும் என்பது ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Most Read : நாம தினமும் இத குடிக்கிறதால தான் புற்றுநோய் வருதுன்னு தெரியுமா?

குடும்ப வரலாறு

குடும்ப வரலாறு

குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவை இருந்தால் அது, பின்வரும் சந்ததியினருக்கு ஏற்படக்கூடும் என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. அந்த வகையில், சாதாரண பிரச்னைகள் மட்டுமின்றி மார்பக புற்றுநோயும் முன்பிருந்த சந்ததியினருக்கு இருந்தால் ஏற்படக்கூடும் என்பது சற்று அதிர்ச்சி தரக்கூடியது தான். அதிலும், 50 வயதிற்கு முன்னதாக தங்களது குடும்பத்தில் பெற்றோர், உடன்பிறப்புகள், குழந்தைகள் போன்ற பெண் உறவுகளுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் அத்தகைய குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. 10ல் 9 பெண்களுக்கு குடும்ப ரீதியாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதில்லை என்பது ஒரு சந்தோஷமான செய்தி தான்.

அதிக எடை

அதிக எடை

உடல் எடை அதிகரிக்கும் பிரச்னை தற்போது பலரும் சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகும். அந்த வகையில் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு ஒரு படி மேலாக, மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு பருமனாக உள்ள பெண்களுக்கு சற்று வாய்ப்புகள் அதிகமாம். உடலின் எடை கூட கூட, மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் கூடுமாம். எனவே, உடல் எடையில் சற்று கவனம் வைத்து கொள்ளுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆண்களுக்கு சமமாக பெண்களும் தற்போதைய நாகரிக உலகிற்கு ஏற்றவாறு, மது அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்காமல் மது அருந்தும் பழக்கமும் சிறு பிரச்னைகள் தரக்கூடும். அந்த வகையில், குறிப்பிட்ட அளவை விட, பெண்கள் அதிகமான அளவு ஆல்கஹால் உட்கொள்ளும் போது, மார்பக புற்றுநோய் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. உடலில் ஆல்கஹால் அளவு அதிகரிக்க அதிகரிக்க, நோய் பாதிப்பின் அளவும் அதிகரிக்கக்கூடும்.

ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT)

ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT)

ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து சிறிதளவு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சையானது, முறையாக மாதவிடாய் ஏற்படாத, 50 வயதிற்கு முன்னதாக நின்ற பெண்கள், தங்கள் உடலில் மாதவிடாய் ஏற்படுத்தும் ஹார்மோன்களை மாற்றி கொள்வதற்காக மேற்கொள்வதாகும். எனவே, இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளும் பெண்கள் நோய் தாக்கம் குறித்த தங்களது உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் விசாரித்து மேற்கொள்வதே உகந்தது.

வாய்வழி கருத்தடை

வாய்வழி கருத்தடை

கருத்தடை மாத்திரைகள் சிலவற்றை தங்களது ஆரம்ப காலத்தில் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாம். முன்பு மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால் மறக்காமல் பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது. ஏனென்றால் வருமுன் காப்பது சிறந்ததல்லவா.

வயது கடந்து குழந்தை பெற்றல் அல்லது குழந்தை பெறாமல் இருத்தல்

வயது கடந்து குழந்தை பெற்றல் அல்லது குழந்தை பெறாமல் இருத்தல்

திருமணம் ஆன பெண்கள் பல்வேறு உடல் கோளாறுகள் அல்லது தங்களது விருப்பதின் பேரில் குழந்தை பேற்றை தள்ளி போடுகின்றனர். இது அவர்களது எதிர்காலத்தில் எத்தகைய பிரச்னையை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெண்கள் சிலர் இத்தகைய முடிவை எடுக்கின்றனர். அப்படி, உரிய காலத்தில் இல்லாமல் நீண்ட காலத்திற்கு பிறகு தங்களது முதல் குழந்தை பெற்று கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருக்கிறதாம். அதேப் போன்று, குழந்தை பெறாமல் இருக்கும் பெண்களுக்கும் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read : இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க... புற்றுநோய் சீக்கிரம் வந்துடும்...

பூப்படைதலும், மாதவிடாய் நிற்பதும்

பூப்படைதலும், மாதவிடாய் நிற்பதும்

ஒரு பெண்ணிற்கு பூப்படைதல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த காலத்தில், 13 வயதிற்கு மேல் தான் பெண் குழந்தைகள் சாதாரண பூப்படைவார்கள். ஆனால், தற்காலத்தில் உள்ள உணவு பழக்கத்தால் பெண் குழந்தைகள் 12 வயதிற்கு முன்னதாகவே, இன்னும் சில குழந்தைகள் 10 வயதிற்கு முன்னதாகவும் பூப்படைகின்றனர். மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அதேப்போல், 50 வயதில் முடிய வேண்டிய மாதவிடாய், 55 வயதை தாண்டி சென்று தாமதமாக முடிந்தால் அதுவும் பிரச்னை தான். பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் சற்று கவனம் செலுத்தி தங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Causes Breast Cancer?

Want to know what are the causes of breast cancer? Read on to know more...
Desktop Bottom Promotion