Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் அனைத்து கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கிரகங்களின் இயக்கங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் அழகு, அன்பு, ஆடம்பரம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான கிரகமாகக் கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் அமைந்தால், அவர்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.
தற்போது மீன ராசியில் நிலைபெற்றிருக்கும் சுக்கிரன், மார்ச் 26 அன்று மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்து, ஏப்ரல் 19 வரை அங்கேயே நிலைத்திருக்கும். இது ஒரு சக்திவாய்ந்த கிரக நிகழ்வாகும். இந்த காலகட்டத்தில் அது 'சுக்ராதித்ய யோகம்' எனப்படும் ஒரு சக்திவாய்ந்த கிரக அமைப்பை உருவாக்கும். சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழையும் போது அனைத்து ராசிக்கார்களும் அதற்கான பலன்களை அனுபவித்தாலும் சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
சுக்கிரன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகம் மேஷ ராசியின் லக்னத்தில் உருவாகுவதால் இது அவர்களுக்கு மகத்தான நன்மைகளை வழங்கப்போகிறது. இதனால் அவர்களின் தன்னம்பிக்கையும் வசீகரமும் அதிகரிக்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது திட்டப்பணிகளுக்கான வாய்ப்புகளால், தொழில் வாய்ப்புகள் மேம்படக்கூடும். அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் எதிர்பாராத நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய முடிவுகளை அடைய முடியும். அவர்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த சிரமங்கள் முடிவுக்கு வரும். அவர்களுக்கு புதிய வேலை தேடும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முடியும்.
அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக பெயர்ச்சியால் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். நிதி விஷயங்களை ஒழுக்கத்துடன் நிர்வப்பதால், அவர்கள் சந்தித்து வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் பெரிய வெற்றிகளை உறுதி செய்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வந்து அமைதியும், மகிழ்ச்சியும் உருவாகும்.
கும்பம்
இந்த சுக்கிர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் சாதகமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.
அவர்களின் வாழ்க்கைத் துணைக்காக சில ஆச்சரியப் பரிசுகளை வழங்கலாம். இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
