For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

|

நிறைய மக்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அன்றாடம் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், வயிறு உப்புசத்துடன், மிகவும் அசௌகரியமாக இருக்கும். மேலும் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள பிடிக்காது. அப்படியே உணவை உட்கொண்டால், வயிறு மேலும் உப்புசத்துடன் இருக்கும் மற்றும் வாய்வுத் தொல்லையையும் சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனையை அடிக்கடி சந்திப்பது நல்லதல்ல.

ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் குடலியக்கம் மெதுவாக நடைபெறுவது தான். இதன் விளைவாக உடலில் மலம் இறுக்கமடைந்து, வெளியேற்றுவதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமென்றால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு பல மருந்துகள் இருக்கலாம். ஆனால், அந்த மருந்துகளுடன் பக்கவிளைவுகளும் இருப்பதால், மருந்துகளை நாடுவதற்கு பதிலாக, இயற்கை வழிகளைப் பின்பற்றுவதே சிறந்தது.

Best Juice Recipes for Constipation Relief

மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பதற்கு சில ஜூஸ்கள் உதவியாக இருக்கும். இது முறையான குடலியக்கத்திற்கு உதவும் மற்றும் குடலை சுத்தம் செய்யும். எந்த ஜூஸ்கள் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு பதிலாக, ஏன் பழ ஜூஸ்கள் மலச்சிக்கலுக்கு சிறந்தது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கலுக்கு பழச்சாறுகளைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மலச்சிக்கலுக்கு பழச்சாறுகளைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஜூஸ்களில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் ஜூஸ்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ஜூஸ்களைக் குடிப்பதனால், உடலில் நீர்ச்சத்து சிறப்பான அளவில் இருப்பதோடு, உடலுக்கு தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும். அதிலும் கரையக்கூடிய நார்ச்சத்து மலம் இறுக்கமடையாமல், அதில் நீரை தக்க வைத்து மென்மையாக்கும். இதன் மூலம் குடலியக்கம் சிறப்பாக இருக்கும். கரையாத நார்ச்சத்து மலத் தேக்கத்தை அதிகரித்து, குடலியக்கத்தை வேகமாக நடைபெறச் செய்கிறது. அதிலும் ஜூஸ்களில் உள்ள சார்பிடோல் என்னும் கார்போஹைட்ரேட் சீரான குடலியக்கத்திற்கு உதவுகிறது.

அதற்காக மலச்சிக்கல் இருக்கும் போது வெறும் பழச்சாறுகளை மட்டும் பருக வேண்டும் என்பதில்லை அல்லது அளவுக்கு அதிகமாக பழச்சாறுகளைக் குடிக்க வேண்டும் என்பதில்லை. தினமும் குறிப்பிட்ட அளவில் குடித்து வந்தாலே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

எவ்வளவு ஜூஸ் குடிக்க வேண்டும்?

எவ்வளவு ஜூஸ் குடிக்க வேண்டும்?

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஒரு கப் பழச்சாறுகளைப் பருகினால் போதும். அதிலும் பழச்சாறுகளைத் தயாரிக்கும் போது, அதைக் கூழ் வடிவில் எடுங்கள் மற்றும் அதில் சர்க்கரை எதுவும் சேர்க்க வேண்டாம். விருப்பம் இருந்தால், சீரகப் பொடி மற்றும் சோம்பு பொடியை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் குடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேறும். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட ஜூஸ்களைக் குடிப்பதாக இருந்தால், அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதே சிறந்தது.

இப்போது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் பழச்சாறுகளைக் காண்போம்.

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

* ஆப்பிள் - 1

* சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் - 1/2 கப்

தயாரிக்கும் முறை:

* ஆப்பிளின் விதைகளை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை பிளெண்டரில் போட்டு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றி, சோம்பு பொடி சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை - 1/2

* வெதுவெதுப்பான நீர் - 1 கப்

* தேன் - 1 டீஸ்பூன்

* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:

* ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை நன்கு கலந்து, பருக வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

தேவையான பொருட்கள்:

* நறுக்கிய ஆரஞ்சு - 1 கப்

* ப்ளாக் சால்ட் - 1 சிட்டிகை

தயாரிக்கும் முறை:

* ஆரஞ்சு பழத் துண்டுகளை பிளெண்டரில் போட்டு அரைத்து, ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த ஜூஸில் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

உலர் முந்திரிப் பழ ஜூஸ்

உலர் முந்திரிப் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்:

* உலர் முந்திரிப் பழம் - 5-6

* தேன் - 1/2 டீஸ்பூன்

* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

* வெதுவெதுப்பான நீர் - 1 கப்

தயாரிக்கும் முறை:

* உலர் முந்திரிப் பழங்களை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊறு வைக்க வேண்டும்.

* முந்திரிப் பழங்களானது மென்மையானதும், அதை பிளெண்டரில் போட்டு, நீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது ஜூஸ் தயார். ஜூஸை டம்ளரில் ஊற்றி, குடிக்கலாம்.

பேரிக்காய் ஜூஸ

பேரிக்காய் ஜூஸ

தேவையான பொருட்கள்:

* பேரிக்காய் - 2

* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

* ப்ளாக் சால்ட் - 1 சிட்டிகை

தயாரிக்கும் முறை:

* பேரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நறுக்கிய பேரிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.

* அரைத்து வைத்துள்ள பேரிக்காயை பிழிந்து சாறு எடுத்து அதனை ஒரு டம்ளரில் ஊற்றி வைக்கவும்.

* பின்னர், பேரிக்காய் சாற்றுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ப்ளாக் சால்ட் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.

பழச்சாறுகள் மலச்சிக்கலுக்கு நல்லதா?

பழச்சாறுகள் மலச்சிக்கலுக்கு நல்லதா?

* பழங்களில் உள்ள சர்க்கரை, பழச்சாறுகளில் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால், பழச்சாறுகள் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

* அதேப் போல் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள், பழச்சாறுகளைப் பருகினால், நிலைமை மேலும் மோசமாகும். எனவே இத்தகையவர்களும் பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Juice Recipes for Constipation Relief

Below are given some fruit juices that will help you treat constipation. They help in proper movement of bowel and in cleansing the colon.
Story first published: Saturday, October 6, 2018, 17:11 [IST]
Desktop Bottom Promotion