Latest Updates
-
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்! -
செவ்வாய் மேஷ ராசியில் உதயமாவதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து!
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்..
Ramzan Eid 2026: இன்று ரம்ஜான் பண்டிகை. இந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய வீடுகளில் அசைவ உணவுகளை பலவாறு சமைத்து சாப்பிடுவார்கள். குறிப்பாக ரம்ஜான் பண்டிகையானது மட்டன் பிரியாணி இல்லாமல் முழுமையடையாது. எனவே பிரியாணி பிரியர்களுக்கு இந்த ரம்ஜான் பண்டிகை நிச்சயம் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்.
அதுவும் முஸ்லீம் நண்பர் இருந்தால், நாள் முழுவதும் ஆசை தீர பிரியாணியை சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி பிரியாணியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதன் விளைவாக செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் பிரியாணியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களின் காரணமாக, அது செரிமானத்தை மெதுவாக்கி, வயிற்று அமிலத்தை அதிகரித்து, வயிறு உப்புசம், அமிலத்தன்மை மற்றும் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

ரம்ஜான் பண்டிகை அன்று பிரியாணியை அளவாக சாப்பிடுவது என்பது சற்று கஷ்டம் தான். ஆயினும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதிகமாக இல்லாவிட்டாலும், மிதமான அளவில் சாப்பிட முயற்சி செய்யுங்கள். மேலும் பிரியாணி சாப்பிட்டு தீவிர அஜீரண கோளாறு பிரச்சனையை சந்திக்க கூடாதெனில், பின்வரும் 5 பானங்களை குடியுங்கள்.
1. இஞ்சி டீ
பிரியாணி சாப்பிட்ட பின் குடிக்க வேண்டிய மற்றொரு பானம் தான் இஞ்சி டீ. இந்த டீயானது செரிமான நொதிகளைத் தூண்டி, இரைப்பையை விரைவாகக் காலி செய்வதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள 6-ஜிஞ்சரால், வயிற்றுக்கு இயற்கையாக இதமளிக்கும் பொருளாகச் செயல்படுகிறது. எனவே கனமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கப் சூடான இஞ்சி டீயை குடியுங்கள்.
2. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை
பிரியாணி சாப்பிட்ட பின் அஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து குடியுங்கள். இதனால் அதில் உள்ள அமிலத்தன்மை, செரிமான நொதிகள் தூண்டிவிடுவதோடு, கொழுப்புக்களை செரிக்க தேவையான பித்தநுர் உற்பத்தியையும் தூண்டும். இதனால் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் அசௌகரியம் போன்றவை குறையக்கூடும்.
3. புதினா டீ
பிரியாணி போன்ற கடினமான உணவுக்கு பின் அருந்தக்கூடிய மற்றொரு பானம் தான் புதினா டீ. இந்த டீயானது செரிமானப் பாதை தசைகளைத் தளரச் செய்து, வயிறு உப்புசம், வாயு தொல்லை மற்றும் அஜீரணத்தைப் போக்கி, செரிமானத்திற்கு உதவுகிறது. சிறந்த பலனைப் பெற இந்த டீயை உணவு உட்கொண்ட 30 நிமிடங்களுக்கு பின் குடிக்க வேண்டும்.
4. சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீ ஒரு காப்ஃபைன் இல்லாத மிகச்சிறந்த மூலிகை மருந்தாகும். இது உணவு உண்ட பின் சந்திக்கும் வயிற்றுப் பிடிப்புகள், வயிறு உப்புசம் மற்றும் அஜீரணத்தைத் தணிக்கும் ஒரு இதமான காரணியாகச் செயல்படுகிறது. மேலும் இதில் உள்ள தசைப்பிடிப்பு நீக்கும் பண்புகள், செரிமான பாதைகளை தளர்த்த உதவி புரிகின்றன. அதே வேளையில் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அசௌகரியத்தைக் குறைக்க உதவும்.
5. சோம்பு டீ
பொதுவாக பிரியாணி போன்ற ஒரு முழு உணவு உண்ட பின், சோம்பு கொண்டு டீ தயாரித்து குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது, இரைப்பை-குடல் தசைகளைத் தளர்த்துவதன் மூலம் தசைப்பிடிப்பை எளிதாக்குகிறது. அதுவும் இதில் உள்ள ஆவியாகும் எண்ணெய், செரிமான நொதிகளை தூண்டிவிட்டு, உணவுகளை விரைவில் உடைத்தெறித்து செரிமானமடையச் செய்கிறது. எனவே ஒரு டம்ளர் சூடான நீரில் 1 ஸ்பூன் சோம்பை நசுக்கி சேர்த்து மூடி வைத்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குடியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

