For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய நோய் வராமல் தடுக்கவும் இந்த டீயை குடிங்க போதும்...!

ஆரோக்கியமான மூலிகை டீக்களை வீட்டில் உள்ள சில பொருட்களைப் பயன்படுத்தி எளிதில் தயாரிக்கலாம். அப்படிப்பட்ட டீக்களில் ஒன்று தான் வெள்ளரி புதினா டீ.

|

மில்லினியல்களைப் பொறுத்தவரை, குடும்பத்திற்கு அடுத்தப்படியாக உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் அவர்களது வாழ்க்கையில் இரண்டாவது முக்கியமான விஷயமாகும். ஆய்வு ஒன்றில், இவர்கள் முந்தைய தலைமுறையினரை விட ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள் மற்றும் உடற்பயிற்சி செய்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களது ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் உணவுத் துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

Health Benefits Of Drinking Cucumber Mint Tea In Tamil

அதில் ஆரோக்கிய பிரியர்களின் பிரபலமான ஓர் உணவாக மூலிகை டீக்கள் உள்ளன. சந்தைகளில் பல வகையான மூலிகை டீக்களைக் காணலாம். ஆனால் சில ஆரோக்கியமான மூலிகை டீக்களை வீட்டில் உள்ள சில பொருட்களைப் பயன்படுத்தி எளிதில் தயாரிக்கலாம். அப்படிப்பட்ட டீக்களில் ஒன்று தான் வெள்ளரி புதினா டீ. இந்த டீ தயாரிப்பது எளிதானது மட்டுமல்ல, ஆச்சரியப்பட வைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது.

MOST READ: நுரையீரலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றணுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்...

இப்போது வெள்ளரி புதினா டீயை எப்படி தயாரிப்பது என்றும், அந்த டீயைக் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகளையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரி புதினா டீ தயாரிப்பது எப்படி?

வெள்ளரி புதினா டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

* க்ரீன் டீ பேக் - 2

* சிறிய வெள்ளரிக்காய் - 1

* புதினா இலைகள் - 1 கப்

* தேன் - 1/4 கப்

செய்முறை:

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.

* பின் அந்த நீரில் க்ரீன் டீ பேக்குகள், புதினா இலைகள் மற்றும் சில வெள்ளரித் துண்டுகளைப் போட்டு, 15 நிமிடம் மூடி வைக்கவும்.

* அதே சமயம் 1/4 கப் தேனில், 1/4 கப் சுடுநீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இப்போது டீயை வடிகட்டி, தேன் கலந்த நீரில் கலந்து கொள்ளவும். மேலும் 4 கப் நீரையும் சேர்த்து கலந்து கொண்டு, அதில் சில வெள்ளரிக்காய் துண்டுகளையும், ஐஸ் கட்டிகளையும் போட்டால், சுவையான வெள்ளரி புதினா டீ தயார்.

இப்போது வெள்ளரி புதினா டீயை தினமும் குடித்து வந்தால், பெறும் நன்மைகளைக் காண்போம்.

காபிக்கு சிறந்த மாற்று

காபிக்கு சிறந்த மாற்று

காலையில் எழுந்ததும் பலரும் குடிக்கும் முதல் பானமாக இருப்பது காபி. ஆனால் சிலர் காபியை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதல்ல என்று கூறுகிறார்கள். எனவே காபிக்கு சிறந்த மாற்றாக மற்றும் ஒரு ஆரோக்கியமான நாளின் தொடக்கத்திற்கான சிறந்த பானமாக வெள்ளரி புதினா டீ இருக்கும்.

அஜீரண பிரச்சனை நீங்கும்

அஜீரண பிரச்சனை நீங்கும்

அஜீரண பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் ஒரு பொருள் தான் புதினா. இதில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது வயிற்று உப்புசத்தையும் போக்கும். மதிய வேளையில் அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ட பின் ஒரு டம்ளர் வெள்ளரி புதினா டீ குடித்தால், எவ்வித அஜீரண கோளாறும் ஏற்படாது.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

வெள்ளரிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பல பகுதிகளில் ஈடுபடக்கூடியது. வெள்ளரிக்காய் புதினா டீயை தினமும் குடிக்கும் பழக்கம் இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபடுத்தப்படுவதோடு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

வெள்ளரிக்காய் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து வெள்ளரிக்காயை அன்றாடம் உட்கொள்வது மிகவும் நல்லது என்பது தெரிகிறது. அதிலும் வெள்ளரிக்காய் புதினா டீயை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், இதய நோயின் அபாயத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

நீங்கள் சோர்ந்து இருக்கும் போது, ஒரு டம்ளர் வெள்ளரி புதினா டீயைக் குடித்தால், உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். அதிலும் இந்த பானத்தை வெயில் காலத்தில் குடித்தால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு, அதிகப்படியான வெப்பத்தால் உடல் வறட்சி அடைவதும் தடுக்கப்படும். மொத்தத்தில் வெள்ளரி புதினா டீ உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Drinking Cucumber Mint Tea In Tamil

Not just cucumber mint tea is easy to make, but also tastes amazing and offers many health benefits. Want to try it? Here's how to make it.
Desktop Bottom Promotion