Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips In Tamil: தற்போது தலைமுடி உதிர்வு பிரச்சனையை நிறைய பேர் சந்திக்கிறார்கள். பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிரும். இது சாதாரணமானது தான். ஆனால் ஒவ்வொரு முறை தலையில் கையை வைக்கும் போதும், கொத்து கொத்தாக தலைமுடி கொட்டுகிறது என்றால் உடனே அதை கவனித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு தலைமுடி பல்வேறு காரணங்களால் கொட்டலாம். அதில் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, தலைமுடிக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது மற்றும் பராமரிப்புக்களை கொடுக்காமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பொதுவாக தலைமுடி பராமரிப்பு என்று வரும் போது, நமது முடிக்காக நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெய் தலைமுடியை வலிமையாகவும், பட்டுப்போன்றும் வைத்துக் கொள்ள உதவும். ஆனால் அளவுக்கு அதிகமாக தலைமுடி கொட்டும் போது, முடி உதிர்வைக் குறைக்கவும் மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், தேங்காய் எண்ணெயுடன் ஒருசில எண்ணெய்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
இப்படி பயன்படுத்தும் போது தலைமுடி வலுவடைவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது முடியின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தேங்காய் எண்ணெயுடன் எந்த எண்ணெயை சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
1. லாவெண்டர் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
தலைமுடி அதிகமாக உதிரும் போது, நல்ல நறுமணமிக்க லாலெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
2013 ஆம் ஆண்டு எவிடன்ஸ்-பேஸ்டு காம்ப்ளிமெண்டரி அண்ட் ஆல்டர்நேட்டிவ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, லாவெண்டர் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவது மன அழுத்தத்தைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே மன அழுத்தத்தினால் தலைமுடி உதிர்கிறது என்றால், இந்த லாவெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்துங்கள்.
2. நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
உங்களுக்கு ஏற்கனவே வறண்ட தலைமுடியா? இந்நிலையில் முடி உதிர்வும் அதிகமாக உள்ளதா? அப்படியானால் நெல்லிக்காய் எண்ணெய் அல்லது பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை வலுப்படுத்தி, தலைமுடி உதிர்வதைத் தடுப்பதாக நம்பப்படுகிறது.
3. எலுமிச்சை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
பொடுகு தொல்லையால் தலைமுடி உதிர்வை சந்திப்பவர்கள், எலுமிச்சை எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தலாம். இதனால் எலுமிச்சையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஸ்கால்ப்பில் உள்ள பொடுகு தொல்லைக்கு காரணமான பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்தும் மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். ஆனால் இந்த காம்போ எண்ணெயை வாரத்திற்கு 1 முறை தான் பயன்படுத்த வேண்டும்.
4. ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
4-6 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைக்கு பயன்படுத்தும் போது, பொடுகுத் தொல்லை கட்டுப்படுவதோடு, தலைமுடி வலிமையாக இருக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியும் மேம்படும்.
5. விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
தலைமுடி பலவீனத்தால் உதிர்கிறது என்றால், தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெயை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதனால் அதில் உள்ள சத்துக்கள் கிடைத்து, தலைமுடியின் வளர்ச்சி ஊக்குவிப்பதோடு, தலைமுடி உதிர்வதும் நின்றுவிடும். அதற்கு இந்த காம்போ எண்ணெயை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இந்த எண்ணெயை பயன்படுத்திய பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
