Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Venus Transit In Revati Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். மேலும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் வருகிற மார்ச் 15 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன்.

சுக்கிரன் புதன் ஆளும் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்களையும், சவால்களையும் தரப் போகிறது. இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் திடீர் செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் கையில் சேமித்து வைத்துள்ள பணம் கரையும். பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால், பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் பணம் தொடர்பாக எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் தங்கள் வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக பெரிய அளவில் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் போகலாம். இக்காலத்தில் எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு படித்து பார்த்த பின் முடிவெடுக்க வேண்டும். பணம் தொடர்பாக எந்த முடிவுகளையும் அவசரமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சொத்து விஷங்களில் பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இதனால் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. வருமானம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு புதிய முதலீடுகளையும் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களின் நற்பெயர் பாழாகலாம். வியாபாரிகள் இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரித்து, நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதையோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த கடன் பெரிய சுமையாக மாறும்.
மீனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் பொருட்கள் திருடு போகும் வாய்ப்புள்ளது. ஆடம்பர செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பட்ஜெட் பாழாகி, பெரிய அளவில் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் பணம் தொடர்பாக எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
