Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
இஞ்சி டீயை காலையில் வெறும் வயித்துல குடிக்காதீங்க.. இல்ல இந்த பிரச்சனைகளை சந்திப்பீங்க..
Ginger Tea Side Effects In Tamil: நமது சமையலறையில் மருத்துவ குணம் வாய்ந்த நிறைய பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இஞ்சி. இந்த இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த மருத்துவ குணங்கள் காரணமாக இஞ்சி ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சமையலுக்கு அடுத்தப்படியாக இஞ்சியை எடுப்பதற்கான சிறந்த வழி, அதைக் கொண்டு டீ தயாரித்து குடிப்பது தான். இஞ்சி டீயை குடிப்பதன் மூலம், செரிமான பிரச்சனைகள் தீர்ந்து, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் அந்த இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ மற்றும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலோ பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதுவும் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், குறைவான இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது ஒருவர் இஞ்சி டீயை அதிகமாக குடித்தால் எந்த மாதிரியான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
வயிற்றுப்போக்கு
இஞ்சி டீயை அதிகமாக குடிப்பது வயிற்றுப் போக்கின் அபாயத்தை அதிகரிக்கும். இஞ்சியில் உள்ள பண்புகளை அதிகமாக எடுக்கும் போது, அது செரிமானத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, வயிற்றுப் போக்கிற்கு வழிவகுப்பதோடு, மிகுந்த உடல் அசதியை ஏற்படுத்தும். எனவே இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக எடுக்காமல், அளவாக குடியுங்கள்.
இரத்த அழுத்த பிரச்சனை
இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் இஞ்சி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர சாதாரண இரத்த அழுத்தத்தைக் கொண்டவர்கள் இஞ்சி டீயை அளவாக குடிக்க வேண்டும். அதிகமாக குடித்தால், அது தீங்கை விளைவிக்கும். எனவே இஞ்சி டீ ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவாக குடிப்பதே நல்லது. இல்லாவிட்டால் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
தலைமுடி உதிர்வு
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் தலைமுடி உதிர்வைத் தடுக்க உதவும். அதே வேளையில் அந்த இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது அப்படியே எதிர்மறையாக செயல்பட்டு, முடி உதிர்வை உண்டாக்கும். எனவே இஞ்சி டீ குடிக்கும் பழக்கம் இருந்து, திடீரென்று தலைமுடி அதிகம் உதிர்வதை அனுபவித்தால், நீங்கள் இஞ்சி டீயை அதிகமாக குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் இஞ்சி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வயிற்று எரிச்சல்
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் வயிற்றி அமில உற்பத்தியை அதிகரிக்கும். எனவே இஞ்சி டீயை அதிகமாக குடிக்கும் போது, அது வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இஞ்சி டீயை அதிகமாக குடித்தால், அது மலசிக்கல் மற்றும் வாய்வு தொல்லையை உண்டாக்கும்.
தூக்கமின்மை பிரச்சனைகள்
இஞ்சி டீயை அதிகம் குடிப்பதால் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தூக்கமின்மை. யார் ஒருவர் அதிகமாக இஞ்சி டீயைக் குடிக்கிறாரோ, அவர் தூக்கமின்மையால் அவதிப்படுவார். இம்மாதிரியான சூழ்நிலையில் இஞ்சி டீ குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications