டிவியிலிருந்து பரவும் விஷம் பற்றித் தெரியுமா?

Posted By: Aashika Natesan
Subscribe to Boldsky

டிவி. யாராலும் தவிர்க்க முடியாத விருந்தாளியாக நம் வீடுகளில் உட்கார்ந்திருக்கிறது, குழந்தைகள் மற்றும் பெண்களின் மிக முக்கிய பொழுதுபோக்காக ஆக்கிரமித்திருக்கும் டி.வி.யை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு உபாதைகளை சந்திக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெல்லக் கொல்லும் விஷம் :

மெல்லக் கொல்லும் விஷம் :

டி.வி. முன்னால் தொடர்ந்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு ஒவ்வொரு நாளும் 18 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றிவிடும் இந்த டிவி கலாச்சாரம் மெல்லக் கொல்லும் விஷம் என்றால் அது மிகையாகாது.

தூக்கத்தை கெடுக்கும் :

தூக்கத்தை கெடுக்கும் :

ஆரோக்கியமான உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமானது ஆழ்ந்த தூக்கம். சராசரியாக ஒரு மனிதன் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும், அதிக நேரம் டிவி பார்ப்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கெடுகிறது. அதோடு, டிவியிலிருந்து வரும் கதிர்களால் கண்களை பாதிக்கும் அதோடு மெலடோனின் சுரப்பையும் பாதிக்கிறது.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

ஆராய்ச்சி முடிவுகளின் படி, மிக அதிக நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்து டிவி பார்ப்பவர்களுக்கு டைப்2 வகை சர்க்கரை நோய் வர காரணமாகும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் சர்க்கரை நோய் வருவதற்க்கான வாய்ப்புகள் ஒவ்வொருநாளும் 14 சதவீதம் வரை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறதாம்.

ஒபீசிட்டி :

ஒபீசிட்டி :

ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் நம் உடலின் மெட்டபாலிக் ரேட் குறைகிறது. இதனால் நம் உடலில் சேரும் கொழுப்பு குறையாமல் ஒபீசிட்டி உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

கவனச்சிதறல் :

கவனச்சிதறல் :

அதிரும் சத்தங்கள், கண்ணைக் கூசச்செய்யும் வெளிச்சம், மிக வேகமாக மாறிக்கொண்டேயிருக்கும் படங்கள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நரம்பு தொடர்பான பிரச்சனைகள், கூர்ந்து கவனித்தலில் சிக்கல் போன்றவை ஏற்படும்.

ஆஸ்துமா :

ஆஸ்துமா :

பிரிட்டனில் ஒருவயது முதல் 11 வயது வரையிலான 3000 குழந்தைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவில் , டிவி முன்பாக அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாக கண்டுபிடித்துள்ளனர்.

முறையற்ற உணவுப்பழக்கம் :

முறையற்ற உணவுப்பழக்கம் :

ஆர்வத்துடன் டி.வி.முன்னால் உட்கார்ந்திருப்பவர்கள் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று அளவு தெரியாமல் சாப்பிடுவது உண்டு, அதுவும் சாப்பிடும் பொருள் துரித உணவுகளாக, எண்ணெயில் பொறித்த உணவுகளாக இருக்கும் போது, அவை வேகமாக உடல்நலத்தை பாதிக்கும். ஏற்கனவே உடல் உழைப்பின்றி ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும் போது உணவை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது இன்னும் சிக்கலையே ஏற்ப்படுத்தும். எப்போதும் சுவையறிந்து நிதானமாக மென்று சாப்பிடுவது தான் நல்லது.

முடங்கும் செயல்பாடுகள் :

முடங்கும் செயல்பாடுகள் :

அதிக நேரம் டி.வி., பார்த்துக் கொண்டிருப்பவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களை விட குறைந்தே காணப்படுகிறது. மனிதர்களுடன் நேரடியாக உரையாடுவதற்கும் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு மனிதர்கள் பேசிக்கொண்டிருப்பதையே பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

கண்களை பாதிக்கும் :

கண்களை பாதிக்கும் :

இருட்டான அறையில் அதிக வெளிச்சத்துடன் டி.வி. பார்ப்பது, அருகில் உட்கார்ந்து டி.வி பார்ப்பது, நீண்ட நேரம் கண்களை சிமிட்டாமல் ஒரேயிடத்தை உத்து பார்ப்பது போன்ற செயல்களால் கண்கள் பாதிப்படைகிறது.

அதிக கோபம் :

அதிக கோபம் :

வன்முறையை தூண்டும் விதமான காட்சிகளையும் எதை வேண்டுமானாலும் நம்மால் செய்ய முடியும் என்கிற பிம்பத்தை டிவி ஏற்படுத்துவதால் குழந்தைகளின் எண்ணத்தில் மாற்றம் உண்டாகிறது. தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் மத்தியில் அது அதிக கோபமாகவோ அல்லது தான் தோன்றித்தனமான சிந்தனைகளை உருவாக்கி அவர்களின் இயல்பு வாழ்க்கையையே சீர்குலைக்கிறது.

பயம் :

பயம் :

மற்றவர்களுடன் தொடர்பின்றி இருப்பதால் எல்லா சூழ்நிலையையும் தானே தனியாய் சமாளிக்கப்போவதாய் நினைத்து மனரீதியாக பாதிக்கப்படுவர். பார்ப்பது எல்லாமே நிஜம் என்று நம்பும் போது அவர்களின் மனதில் பல்வேறு பயங்களும் உருவாகிறது.

சீர்குலையும் சுயமுன்னேற்றம் :

சீர்குலையும் சுயமுன்னேற்றம் :

தன் வயதொத்த பிற குழந்தைகளுடன் தொடர்பற்ற வீட்டிற்க்குள்ளேயே டிவி முன்னால் முடங்கி கிடக்கும் குழந்தைகளால் வளர்ந்த பின்பு சரியாக சமூகத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். வளர வளர அவர்களது சுய முன்னேற்றமும் பாதிப்படையும்.

எண்ணங்கள் :

எண்ணங்கள் :

எந்தவிதமான உணர்சிகளையும் உணராமல் மற்றவர்கள் உணர்வதை எட்ட நின்று பார்க்கும் இந்த டி.வி.கலாச்சாரத்தால் குழந்தைகள் மனரீதியாக பாதிப்படைவதுடன். தனக்கு என்ன தோன்றுகிறது என்று சரியாக மற்றவர்களுடன் பகிர முடியாமல் திணறுகிறது. தன் விருப்பு வெறுப்புகளை பகிராமல் நாளடைவில் அது பல்வேறு மனகக்சப்புகளை உண்டாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

Watching Tv Is Harm Your Health

TV watching is comfort passtime for childrens and adults,But It Increases Health issues to them.