ஜிம்மில் நீங்கள் அதிகமாக பயிற்சி செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஜிம்மில் மாங்கு மாங்கு என நம்மில் பலரும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இயல்பான ஒன்று தான். அது நம் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுவதும் உண்மை தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. அது அனைத்திற்கும் பொருந்தும்.

ஆம், ஜிம்மில் நீங்கள் ஈடுபடும் உடற்பயிற்சி சரியான அளவா அல்லது அதிகமானதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? சில நேரங்களில் சோர்வடைவது இயல்பு தான், ஆனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால்...??? ஆகவே தொடர்ந்து படித்து, ஜிம்மில் நீங்கள் அதிகமாக பயிற்சி செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூச்சுத்திணறல் ஏற்படுதல்

மூச்சுத்திணறல் ஏற்படுதல்

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மூச்சை இழுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் உடற்பயிற்சியில் ஈடுபடாத போது உங்களுக்கு அதிகமாக இழைப்பு ஏற்படுகிறதா? அப்படியானால் நீங்கள் பயிற்சியில் நீங்கள் அதிகமாக ஈடுபடுகிறீர்கள் என அர்த்தமாகும். உடற்பயிற்சியின் போது சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டால், 60 நொடிகளுக்குள் உங்களின் இழைப்பு குறைய வேண்டும். ஒரு வேளை, உங்களுக்கு இழைப்பு நிற்கவில்லை என்றால், நீங்கள் வருத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபடுகிறீர்கள் என அர்த்தமாகும். அப்படிப்பட்ட சூழலில், மீண்டு வருவதற்கு நீண்ட நேரமாகும். ஆனால் உடல் மீண்டும் இயல்பு நிலையில் செயல்படத் தொடங்கும்.

இருப்பினும், பாதம் மற்றும் கணுக்கால்களில் வீக்கம், அதிக காய்ச்சல், இருமல், நடுக்கம், வெளிரிய விரல் நுனிகள், மூச்சுத்திணறல் போன்ற சில கூடுதல் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், அது நெஞ்சு வலிக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அதனால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நெஞ்சு அசௌகரியம்

நெஞ்சு அசௌகரியம்

மூச்சிறைப்பு போக, கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு, நெஞ்சு அசௌகரியமாக இருந்தால், அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நெஞ்சு அசௌகரியம் என்பது நெஞ்சு வலி அல்லது மார்பு நெறிப்புக்கான (இதயத்திற்கு செல்லவிருக்கும் இரத்தம் மற்றும் ஆக்சிஜனை குறைக்கும், இதயத்தில் உள்ள இரத்த குழாய்களின் அடைப்பு) முக்கியமான அறிகுறியாகும். குறிப்பு: அனைத்து நெஞ்சு வலிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. எரிச்சல், குத்தல் மற்றும் இறுக்கம் போன்ற பல வகை உணர்ச்சிகளை உணரலாம்.

குமட்டலும்.. வாந்தியும்..

குமட்டலும்.. வாந்தியும்..

உடற்பயிற்சியின் போது அல்லது அதற்கு பிறகு வாந்தி எடுப்பது நல்ல பலனை அளிக்காது என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். மிக கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால், வாந்தி எடுக்கலாம். அப்படியானால் உங்கள் பயிற்சியின் அளவை நீங்கள் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வது குமட்டல் ஏற்பட்டால், உங்களுக்கு நீர்ச்சத்து குறைந்து விட்டது அல்லது வெப்ப சோர்வை அனுபவிக்கிறீர்கள் என அர்த்தமாகும். குளிர்ந்த இடத்தில் ஓய்வு எடுப்பதன் மூலம் வெப்ப சோர்வை போக்கலாம். ஆனால் கவனிக்காமல் விட்டு விட்டால், வாதம் வரைக்கும் கொண்டு செல்லும். இதனால் உறுப்புகள் பாதிப்படையலாம், ஏன் மரணம் கூட நிகழலாம்.

காய்ச்சல்

காய்ச்சல்

உடம்பு சரியில்லாத போது உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லதல்ல, குறிப்பாக காய்ச்சல் இருக்கும் போது. 100.5 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும் போது, கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. வைரல் இதயத்தசையழல் இடர்பாட்டிற்கு உங்களை நீங்களே தள்ளுகிறீர்கள். வைரல் இதயத்தசையழல் என்பது இதய தசையின் அழற்சியாகும். இது மிகவும் ஆபத்தானதாகும். காய்ச்சல் இருக்கும் போது உடற்பயிற்சியில் ஈடுபட்டால், ஆபத்தான கோளாறுகள், நீர்ச்சத்து இழத்தல் மற்றும் அதிக வெப்பம் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம் என சாட்சியங்கள் பரிந்துரைக்கிறது.

தசைகளில் வலி

தசைகளில் வலி

உடற்பயிற்சியின் போதோ அல்லது அரை மணி நேரம் கழித்தோ மூட்டு வலி ஏற்படலாம். ஆனால் அதை தாண்டி அந்த வலி நீடித்தால், நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் எழுந்திருக்கும் போது, நீங்கள் முந்தைய நாள் செய்த உடற்பயிற்சியினால் மூட்டு வலி நீடித்தால், உடற்பயிற்சியின் போது நீங்கள் அளவுக்கு அதிகமாக உங்களை வருத்தியிருக்கிறீர்கள். அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இந்த வலி நீடித்தால், உங்களுக்கு ஓய்வு அவசியம்.

செயலாற்றுகையில் குறைபாடு

செயலாற்றுகையில் குறைபாடு

நீங்கள் மிக தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தால், உங்கள் செயலாற்றுகையில் முன்னேற்றத்தை காண வேண்டும்; குறைந்தது அதே அளவிலாவது நீடிக்க வேண்டும். இயல்பான உடற்பயிற்சியினால் நீங்கள் இயல்பற்ற முறையில் சோர்வடைந்தால், நீங்கள் அளவுக்கு அதிகமாக பயிற்சியில் ஈடுபடுகிறீர்கள் என்பதாகும். அதனால் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது தரத்தில் கவனம் தேவையே தவிர அளவில் அல்ல.

மனநிலை ஏற்ற இறக்கங்கள்

மனநிலை ஏற்ற இறக்கங்கள்

உங்களின் உடல் ரீதியான செயலாற்றுகை சரியான பாதையில் இல்லையென்றால், நீங்கள் மன ரீதியாக சற்று சோர்வடைந்திருக்கக் கூடும். உடல் ரீதியான நடவடிக்கைகள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும் தான். ஆனால் அளவுக்கு மீறி செல்கையில் எரிச்சலை மற்றும் மனநிலையை பாதிக்கும். அளவுக்கு அதிகமாக பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் போட்டியின் உற்சாகத்தை இழந்து விடுவார்கள் என்பது ஒரு பொதுவான நம்பிக்கையாகும்.

விந்தையான தூக்க அமைமுறைகள்

விந்தையான தூக்க அமைமுறைகள்

பகலில் முனைப்புடன் செயல்படும் போது இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இது அப்படியே எதிராக நடைபெறும். உடலை அளவுக்கு அதிகமாக வருத்தினால் ஓய்வின்மை, தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில், ஜிம்மில் உடற்பயிற்சியின் அளவை குறைத்துக் கொள்ளவும். இதனால் உங்களின் தூக்க அமைமுறை மீண்டும் இயல்பு நிலைக்கு மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs You're Overdoing It At The Gym

Here are some of the signs you are overdoing it at the gym. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter