Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா?
Saturday Born Personality: ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த கிழமை அந்நபரின் குணங்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது. அந்த வகையில் சனிக்கிழமை சனி பகவானுக்குரியது.
இந்நாளில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஒரு வாரத்தில் சனிக்கிழமை கடைசி நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பிறந்தவர்கள் அந்த குடும்பத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிப்பர். அதுவும் இந்நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்காது.

மேலும் இவர்கள் ஒழுக்கமானவர்கள், கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள், கண்டிப்பானவர்கள், எதையும் மெதுவாக செய்யக்கூடியவர்கள், எளிமையானவர்கள். இப்படிப்பட்ட சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் மற்றும் இவர்களின் உண்மையான குணம் போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் வெளித்தோற்றம்
ஜோதிடத்தின் படி, சனிக்கிழமைகளில் பிறந்தவர்கள் சற்று கருமையாகவோ அல்லது மாநிறத்திலோ இருப்பார்கள். அதே சமயம் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் இருப்பார்கள். மேலும் சாதாரண உயரத்தில் இருப்பார்கள். மிகவும் குண்டாகவோ அல்லது மிகவும் ஒல்லியாகவோ, மீடியம் சைஸில் இருப்பார்கள்.
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் வார்த்தைகளில் உறுதியாக இருப்பார்கள். அதே சமயம் இவர்கள் சற்று கஞ்சத்தனமாக இருப்பார்கள். அதிக கோபம் வரும். வாழ்க்கையில் ஒரு இலக்கை கொள்ளும் வரை மிகவும் சோம்பேறியாக இருப்பார்கள். கடினமாக உழைப்பார்கள். அந்த கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவார்கள். சற்று அதிகமாக கோபப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். அதுவும் அவர்களுக்கு கோபம் சட்டென்று வந்துவிடும்.
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் தொழில் வாழ்க்கை
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் திறமையானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஐடி, விவசாயம், வாகனம், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நீதிபதிகள், உளவுத் துறை போன்றவை சிறந்த துறைகளாக இருக்கும். இந்த துறையில் பணிபுரிந்தால், தொழில் வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கலாம்.
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் ஆரோக்கியம்
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் நரம்பு தொடர்பான பிரச்சனைகள், எலும்பு பிரச்சனைகள், மூட்டு வலி, சிறுநீரக கல், பித்தக்கற்கள், உடல் பலவீனம், முதுகு வலி, கால் தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படுவார்கள்.
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் உறவு
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் யாரையும் ஏமாற்றமாட்டார்கள். அதே சமயம் தங்களின் அன்பை வெளிப்படுத்தவும் மாட்டார்கள். வாழ்க்கை துணையின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். இப்படி காட்டும் அக்கறையால் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை பெரிய பணக்காரராக இருப்பர்.
அதிர்ஷ்ட நிறம்
சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு உரிய நிறம் தான் கருப்பு மற்றும் அடர் நீலம். எனவே இந்நாளில் இந்த கருப்பு மற்றும் அடர் நீல நிற ஆடைகளை அணிந்து சனி பகவானை வழிபட வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்
சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு உரிய அதிர்ஷ்ட எண் 8. இந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு வேலையையும் அல்லது நல்ல காரியத்தையும் இந்த 8 ஆம் தேதியில் செய்வது நல்லது. இதனால் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
