Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சனிக்கிழமைகளில் இந்த 5 பொருட்களை வாங்காதீங்க.. இல்ல சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க..
Things Not To Buy On Saturday: வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அந்நாளுக்கு உரிய தெய்வங்களை வணங்குவதன் மூலம், அவர்களின் பரிபூர்ண ஆசியைப் பெறலாம். அந்த வகையில் சனிக்கிழமையானது நீதிமான் சனி பகவானுக்கு உரிய நாளாகும்.
இந்நாளில் சனி பகவானை வணங்கினால், அவரது அருளைப் பெறலாம். இதனால் மக்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானின் ஆசியைப் பெற அவருக்கு பிடித்தமான விஷயங்களை செய்து, அவரை மகிழ்விப்பார்கள். அதே சமயம் இந்த சனிக்கிழமைகளில் ஒருசில பொருட்களை வாங்க அல்லது ஒருசில விஷயங்களை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.

அப்படி தடைசெய்யப்பட்ட விஷயங்களை செய்தால், சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இப்போது சனிக்கிழமைகளில் எந்த மாதிரியான பொருட்களை வாங்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.
1. உப்பு
சனிக்கிழமைகளில் ஒருவர் வாங்கக்கூடாத ஒன்று என்றால் அது உப்பு தான். உப்பை சனிக்கிழமைகளில் வாங்குவதால் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு இச்செயல் சனி பகவானையும் கோபப்படுத்தும். முக்கியமாக சனிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் கடன் அதிகரிக்கும் மற்றும் நிதி இழப்புக்களையும் உண்டாக்குவதாக நம்பப்படுகிறது.
2. இரும்பு பொருட்கள்
இரும்பால் செய்யப்பட்ட பொருட்களையும் சனிக்கிழமைகளில் ஒருபோதும் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால், அது சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக்குவதாக கூறுப்படுகிறது. ஒருவேளை இரும்பால் செய்யப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கிவிட்டால், அதை அன்றே வீட்டிற்கு கொண்டு வராமல், மறுநாள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
3. கடுகு எண்ணெய்
சனி பகவானுக்கு உரிய மற்றும் படைக்க ஏற்ற எண்ணெய்களுள் ஒன்று தான் கடுகு எண்ணெய். ஆனால் இந்த கடுகு எண்ணெயை எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் வாங்காதீர்கள். இல்லாவிட்டால் வீட்டில் உள்ளோர் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும் எனவே ஒருபோதும் இந்த எண்ணெயை வாங்கிவிடாதீர்க.ள
4. கருப்பு நிற ஆடைகள்
என்ன தான் சனி பகவானுக்கு கருப்பு நிறம் பிடிக்கும் என்றாலும், சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இநாளில் கருப்பு நிற ஷுக்களுக்கு பாலிஷ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அந்நாள் முழுவதும் தோல்வியையே சந்திப்பீர்க.ள
5. துடைப்பம்
சனிக்கிழமைகளில் நாட்களில் துடைப்பத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாங்கினால், அது சனி தோஷத்தை ஏற்படுத்தும். மேலும் இது ஒவ்வொரு வேலையிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இப்படியான பிரச்சனைகளைத் தவிர்க்க இதை நினைத்தால், சனிக்கிழமைகளில் துடைப்பத்தை வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications