உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்கிறீர்களா? அதிலும் எந்த ஒரு கடினமாக பொருளை தூக்காமல் அல்லது எந்த ஒரு கடுமையான வேலையையும் செய்யாமல், எந்நேரமும் சோர்வு ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக நச்சுக்கள் அல்லது கழிவுகள் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!!

இந்த கழிவுகளானது உண்ணும் உணவுகள், பருகும் பானங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் உடலில் சேர்கிறது. சரி, நம் உடலில் கழிவுகள் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் புகழ்பெற்ற மற்றும் சிறப்பான 7 உணவுகள்!!!

ஏனெனில் இங்கு உடலில் அளவுக்கு அதிகமாக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு

சோர்வு

நீங்கள் எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உணர்ந்தால், அது உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அதிலும் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதனால் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் சோர்வு ஏற்படுகிறது.

மந்த நிலை

மந்த நிலை

உடலில் தேங்கும் சில டாக்ஸின்கள் மனநிலையை மாற்றி, ஒருவித மந்த நிலையுடனும், குழப்பமான மனதுடனும் இருக்கக்கூடும்.

உடல் எடை பிரச்சனைகள்

உடல் எடை பிரச்சனைகள்

உடலில் சேரும் ஒரு வகையான டாக்ஸின்களான கெட்ட கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்தால், அதனால் உடல் எடை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உடல் வலி

உடல் வலி

சில நேரங்களில் காரணமின்றி கடுமையான உடல் வலியை சந்திக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உடலில் டாக்ஸின்கள் அதிக அளவில் உள்ளது என்று அர்த்தம்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஆம், உடலில் டாக்ஸின்கள் இருந்தால், தூக்கமின்மையால் அவஸ்தைப்படக்கூடும். அதுவும் இரவு நேரத்தில் தூக்கம் வரும் ஆனால் வராது என்று இருக்கும்.

உடல் துர்நாற்றம்

உடல் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம், கடுமையான துர்நாற்றத்துடன் மலம் மற்றும் சிறுநீர் வெளியேறுவது போன்றவை கூட டாக்ஸின்கள் உடலில் அதிகம் இருப்பதற்கான அறிகுறியே.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போன்று போன்றவற்றை சந்தித்தால், உங்கள் செரிமான மண்டலம் டாக்ஸின்களால் அதிக அளவில் நிரம்பியுள்ளது என்று அர்த்தம்.

தலைவலி

தலைவலி

உடலில் அளவுக்கு அதிகமான டாக்ஸின்கள் சேர்ந்தால், கடுமையான தலைவலியை உணரக்கூடும். மேலும் சில ஃபாஸ்ட் புட் உணவுப் பொருட்களை உண்ட பின்னர் தலை வலி ஏற்படுவதற்கு காரணம், அதில் உள்ள டாக்ஸிக் பொருள் தான்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

சருமத்தில் திடீரென்று பருக்கள் அல்லது சருமத்தில் அரிப்புகள் ஏற்பட்டால், உடலில் கழிவுகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs You Have Toxins In Your Body

Before knowing how to get rid of toxins in your body you must know about something else. Read on to know about signs you have toxins in your body.
Story first published: Thursday, August 6, 2015, 9:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter