குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா?

Posted By:
Subscribe to Boldsky

எப்போதும் உட்கார்ந்து கொண்டே உடல் உழைப்பு இல்லாமல் வேலைப் பார்ப்பதால், உடலின் பல இடங்களில் வலி அதிகம் ஏற்படும். அப்போது நல்ல சூடான நீரில் குளிக்க வேண்டுமென்று தோன்றும். இப்படி சுடுநீரில் குளிப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, உடல் வலி பறந்து, தசைகள் ரிலாக்ஸாகும். ஆனால் குளிர்ந்த நீரில் குளித்தால், இந்த சுகம் கிடைக்காது. ஆனால் குளிர்ந்த நீரில் குளித்தால் வேறு சில நன்மைகள் எல்லாம் கிடைக்கும்.

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான 10 நன்மைகள்!!!

குளிர்ந்த நீரில் அல்லது ஐஸ் கட்டி நீரில் குளிர்ப்பதை க்ரையோதெரபி என்று சொல்வார்கள். இதனை விளையாட்டு வீரர்கள் பொதுவாக மேற்கொள்வார்கள். ஆனால் எப்போது உடல் ரிலாக்ஸ் ஆக வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அப்போது மட்டும் சுடுநீரில் குளிக்கலாம். மேலும் ஒவ்வொருவம் குளிர்காலத்தில் சுடுநீரில் அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது குளிர்காலத்தில் ஏன் குளிர்ந்த நீரில் குளிர்ப்பது சிறந்தது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எச்சரிக்கையுணர்வை அதிகரிக்கும்

எச்சரிக்கையுணர்வை அதிகரிக்கும்

குளிர்காலத்தில் மந்தமாகவே இருப்போம். அப்போது சுடுநீரில் குளித்தால், இன்னும் மந்தமாகத் தான் இருக்குமே தவிர, எச்சரிக்கையுடன் செயல்பட முடியாது. ஆகவே எச்சரிக்கை உணர்வை அதிகரிக்க குளிர்ந்த நீரில் குளிப்பது தான் மிகவும் சிறந்தது. அதுமட்டுமின்றி, நன்கு ஆழ்ந்த சுவாசத்தை நாள் முழுவதும் நிறைய முறை விட வேண்டும். இதனால் ஆக்ஸிஜன் அதிகமாக கிடைத்து, நாள் முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.

சருமத்திற்கு நல்லது

சருமத்திற்கு நல்லது

குளிர்காலத்தில் சருமம் மற்றும் முடி வறட்சியடைந்துவிடும். அத்தகைய நிலையில் சுடுநீரில் குளித்தால், அது மயிர்கால்களை தளரச் செய்து, சருமத்துளைகளை திறந்து, இன்னும் ஆபத்தை தான் விளைவிக்கும். ஆனால் குளிர்ந்த நீரில் குளித்தால், சருமத்துளைகளை அடைத்து, மயிர்கால்களையும் இறுக்கமடையச் செய்யும்.

நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த ஓட்டம்

நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த ஓட்டம்

குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், விரைவில் நோய்கள் தொற்றிக் கொள்ளும். ஆகவே குளிர்ந்த நீரில் குளித்தால், அது உடலுறுப்புக்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் செயல்படச் செய்யும்.

தசைகளில் காயங்கள்

தசைகளில் காயங்கள்

குளிர்காலத்தில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை தசைகளில் காயங்கள் ஏற்படுவது. காலநிலை குளிர்ச்சியுடன் இருப்பதால் தசைகளில் காயங்கள் ஏற்படும். அப்போது ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், அது கடுமையான வலியை ஏற்படுத்தும். ஆனால் குளிர்ந்த நீரில் குளித்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

மன அழுத்த நிவாரணி

மன அழுத்த நிவாரணி

ஆய்வு ஒன்று குளிர்ந்த நீரில் குளித்தால், யூரிக் ஆசிட்டின் அளவு குறையும் என்று சொல்கிறது. மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளின் அளவை சீராக பராமரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hot or cold water bath in winter: Which is better?

You must know the pros and cons of taking hot or cold water baths during winter. Take a look why cold water bath is better during winter. 
Please Wait while comments are loading...
Subscribe Newsletter