Latest Updates
-
IPL 2026: சிஎஸ்கே வீரர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய சென்னையின் பிரபல தெருவோர உணவுகள்! -
விஜய்க்கு எதிராக போட்டியிடப்போகும் 252 தேர்தல்களில் தோற்ற ' தேர்தல் மன்னன்' யார் தெரியுமா? -
மட்டன் பஞ்சு போல சாப்ட்டா இருக்கணுமா? அப்ப சமைக்கும் போது இந்த 2 பொருட்களை சேத்துக்கோங்க போதும்! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: ஏப்ரல் 16-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! -
கொங்குநாடு ஸ்பெஷல் தட்டைப்பயறு சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க -
வருடத்திற்கு 2 ரயில்கள் மட்டுமே வரும் இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் எது தெரியுமா? -
40 வயதிற்கு மேல் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டிய சைவ மற்றும் அசைவ உணவுகள்! - பட்டியலிடும் டாக்டர்! -
இந்த 5 ராசிக்காரங்க யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிக்கும் அசாத்திய புத்திசாலிகளாம் -
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?
எடைக்குறைப்பு மருந்தை உட்கொள்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் - புதிய ஆய்வு சொல்வது என்ன?
எடை அதிகரிப்பு என்பது தற்போது உலகளவில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவருகிறது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சினையால் இப்போது அவதிப்பட்டு வருகின்றனர். ஒருமுறை அதிகரித்த எடையை மீண்டும் குறைப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. அதனால்தான் சிலர் எடையை வேகமாக குறைக்க சில மருந்துகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிலும் தற்போது ஒரு பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது.
எடையைக் குறைப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திய பிறகு, அவர்கள் இழந்த எடையை மீண்டும் அடையும் போக்கு அதிகரித்து வருகிறது, மேலும் இது, நடத்தை சார்ந்த எடை குறைப்பு டயட்டை முடித்த பிறகு எடை அதிகரிப்பு வேகமாக ஏற்படுகிறது என்று Oxford's Nuffield Department of Primary Care Health Sciences துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய முறைசார் ஆய்வு மற்றும் மெட்டா-பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் 'The BMJ' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

கிட்டதட்ட பாதி மக்கள் 12 மாதங்களுக்குள் GLP-1 ரிசப்டர் அகோனிஸ்ட் சிகிச்சையை நிறுத்திவிடுகிறார்கள் என்று நிஜ உலகத் தரவுகள் கூறும் சூழலில் இந்த கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன, மேலும், சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு வருடமாவது ஆதரவு சிகிச்சையை பெற வேண்டுமென்று NICE வெளியிட்ட சில மாதங்களுக்குப் பிறகும் இது நிகழ்ந்துள்ளது.
ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?
9,341 பெரியவர்கள் உட்பட 37 ஆய்வுகளில், எடையை நிர்வாகிக்கும் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தியப் பிறகு, மாதத்திற்குச் சராசரியாக 0.4 கிலோ எடை அதிகரித்தது. இதன் அடிப்படையில், மக்கள் 1.5 முதல் 2 ஆண்டுகளுக்குள் அவர்கள் எந்த எடையில் எடைக்குறைப்பு பயணத்தைத் தொடங்கினார்களோ அதே எடைக்கு திரும்புகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். செமாக்ளுடைடு மற்றும் டிரிசெபாடைடு போன்ற புதிய மருந்துகளை உட்கொண்டு அதன்பின் நிறுத்தியவர்களுக்கு மாதத்திற்குச் சராசரியாக 0.8 கிலோ எடை மீண்டும் கூடியது. மேலும், சுமார் 1.5 ஆண்டுகளில் ஆரம்ப நிலைக்குத் திரும்புவார்கள் என்று கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
எவ்வளவு எடை குறைக்கப்பட்டது என்பது கணக்கின்றி, மருந்துகளை நிறுத்திய பிறகு எடை மீண்டும் அதிகரிப்பது, உணவு மற்றும் உடற்பயிற்சி ஆதரவு போன்ற நடத்தை சார்ந்த எடைக் குறைப்பு திட்டங்களை நிறுத்திய பிறகு ஏற்படுவதை விட, மாதத்திற்கு சுமார் 0.3 கிலோ வேகமாக இருந்தது. மருந்துகளுடன் கூடிய உடற்பயிற்சிகள் அதிக எடை இழப்புடன் தொடர்புடையதாக இருந்தபோதிலும், அது பின்னர் எடை மீண்டும் அதிகரிக்கும் விகிதத்தைக் குறைக்கவில்லை என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
HbA1c, வெறும் வயிற்றில் உள்ள குளுக்கோஸ் அளவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் உள்ளிட்ட இதய வளர்சிதை மாற்றத்தின் அளவீடுகள் மருந்துகளை உட்கொண்ட போது மேம்பட்டன, ஆனால் மருந்துகள் நிறுத்தப்பட்ட சுமார் 1.4 ஆண்டுகளுக்குள் அவை அடிப்படை நிலைகளுக்குத் திரும்பும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃபீல்ட் முதன்மை சுகாதார அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளரும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் சாம் வெஸ்ட் கூறுகையில் 'இந்த மருந்துகள் உடல் பருமன் சிகிச்சையை மாற்றியமைத்து, குறிப்பிடத்தக்க எடை இழப்பை அடைய உதவுகின்றன. இருப்பினும், இவற்றை நிறுத்திய பிறகு மக்கள் விரைவாக மீண்டும் எடை கூடுகிறார்கள், இது நடத்தை சார்ந்த எடைக்குறைப்பு திட்டங்களில் நாம் காண்பதை விட வேகமானது,' என்று கூறியுள்ளார். 'இது மருந்துகளின் குறைபாடு அல்ல, இது உடல் பருமன் ஒரு நாள்பட்ட, மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஆரோக்கிய பிரச்சினை என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் எடை மேலாண்மைக்கு ஒரு விரிவான அணுகுமுறை இல்லாமல், குறுகிய கால மருந்துகளை எடுத்துக் கொள்வதில் உள்ள ஆபத்துக்களை இது நினைவூட்டுகிறது' என்று கூறியுள்ளார்.
ஆய்வு முடிவுகள்
சராசரியாக 39 வார சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை மேலாண்மை மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திய 9,000-க்கும் மேற்பட்ட பெரியவர்களைக் கண்காணித்த 37 ஆய்வு முடிவுகளை ஆக்ஸ்போர்டு குழு முழுமையாக மதிப்பாய்வு செய்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திய பிறகு சராசரியாக 32 வாரங்களுக்குக் கண்காணிக்கப்பட்டனர். இந்த பகுப்பாய்வில், ஓர்லிஸ்டாட் போன்ற பழைய மருந்துகள் முதல் செமாக்ளுடைட் மற்றும் டிரிசெபாடைட் போன்ற புதிய GLP-1 ரிசப்டர் அகோனிஸ்டுகள் வரையிலான மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த குழு மூன்று வெவ்வேறு பகுப்பாய்வு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியது, அவை அனைத்தும் சீரான முடிவுகளை அளித்தன.
உடற்பயிற்சி மற்றும் நடத்தை சார்ந்த திட்டங்களுடன் ஒப்பீடு
கடந்த கால ஆய்வின் தரவுகளைப் பயன்படுத்தி, எடை மேலாண்மை மருந்துகளை நடத்தை சார்ந்த திட்டங்களுடன் ஒப்பிட்டபோது, ஆரம்பத்தில் இழந்த எடையைக் கணக்கில் கொள்ளாமல், மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திய பிறகு மாதத்திற்குச் சுமார் 0.3 கிலோ என்ற அளவில் எடை மீண்டும் வேகமாக அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான இணைப் பேராசிரியர் டிமிட்ரியோஸ் கூட்டூகிடிஸ் கூறுகையில் 'எடையைக் குறைக்க மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், எடையைக் குறைப்பதற்காகத் தங்கள் உணவுமுறையை மாற்றத் தேவையில்லை என்பதால், இந்த வேகமான எடை அதிகரிப்பு ஏற்படக்கூடும். எனவே, அவர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தும் போது, இழந்த எடையைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் நடைமுறை உத்திகளை அவர்கள் பின்பற்றாமல் இருந்திருக்கலாம்,' என்று கூறுகிறார். மேலும் 'NICE-இன் ஆரம்ப மதிப்பீடுகள், எடை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் அதன் ஆரம்ப நிலைக்குத் திரும்பும் என்று கருதின, ஆனால் எங்கள் தரவுகளின்படி இது சுமார் 18 மாதங்களில் நிகழ்கிறது' என்று கூறினார்.
மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் கவனிக்க வேண்டியவை
இங்கிலாந்தில் தற்போது எடை குறைப்பு மருந்துகளைப் பயன்படுத்தும் பத்தில் ஒன்பது பேர், NHS பரிந்துரையுடன் வரும் விரிவான மருத்துவ மேற்பார்வை இல்லாமல், பெரும்பாலும் அவற்றை தனிப்பட்ட முறையில் வாங்குகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வின் இணை மூத்த ஆசிரியரான பேராசிரியர் சூசன் ஜெப் கூறுகையில், 'உடல் பருமன் என்பது நீண்டகாலம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மீண்டும் மீண்டும் வரும் நிலையாகும், இது உடனடி தீர்வை வழங்கக்கூடிய ஒரு குறுகிய காலப் பிரச்சனை அல்ல. மக்கள் தங்கள் உணவு மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்கள் மூலம் உடல் எடையைக் குறைக்கும்போது, அந்த எடை இழப்பை தக்கவைக்கும் வழிகளை அவர்கள் பயிற்சி செய்கிறார்கள். மருந்துகள் மூலம் எடையை குறைக்கும் போது, அந்த வழக்கங்களை பின்பற்றாமலேயே எடை குறையக்கூடும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வு எடையைக் குறைக்க ஒரு முழுமையான மற்றும் நீண்ட கால அணுகுமுறையின் தேவையையும், எடை அதிகரிப்பதை தடுப்பதின் முக்கியத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதையும் விளக்குகின்றன.'
ஆய்வின் சிக்கல்கள்
ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்விலிருந்த சில குறைபாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். செமாக்ளுடைடு மற்றும் டிரிசெபாடைடு போன்ற புதிய மருந்துகளை ஆராயும் ஆய்வுகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. மேலும், மருந்துகளை நிறுத்திய பிறகு கண்காணிக்கும் காலம் குறைவாக இருந்தது. பெரும்பாலான ஆய்வுகள், நிஜ உலக மருத்துவப் பயன்பாட்டிற்குப் பதிலாக, ஆய்வகங்களில் நடத்தப்பட்டன. இருப்பினும், பல பகுப்பாய்வுகளில் இந்த ஆய்வின் முடிவுகள் உறுதியானவையாக இருந்தன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












