Latest Updates
-
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
IPL 2026: சிஎஸ்கே வீரர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய சென்னையின் பிரபல தெருவோர உணவுகள்!
IPL 2026: கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கட் கீப்பரும் கூட.
பொதுவாக சிஎஸ்கே அணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஏம் ஏ சிதம்பரம் மைதானம் மிகவும் சாதகமாக இருக்கும். இதற்கு ஃபீல்டு ஒரு காரணமாக இருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்கள் வீரர்களுக்கு கொடுக்கும் உற்சாகமும் ஒரு முக்கியமான காரணம் என்றே கூறலாம்.

இப்படியான பெரும் ஆதரவைக் கொண்ட சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் போது, அந்த அணி வீரர்கள் நிச்சயம் சென்னையின் பிரபலமான சில தெருவோர உணவுகளையும் நிச்சயம் சுவைத்து பார்க்க வேண்டும். அப்படி சிஎஸ்கே அணியினர் தவறாமல் சென்னையில் சுவைக்க வேண்டிய அந்த தெருவோர உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
1. சுண்டல்
சென்னை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது மெரீனா பீச்சில் விற்கப்படும் சுண்டல் தான். இந்த சுண்டல் சென்னையின் மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான தெருவோர உணவுகளில் ஒன்றாகும். வேக வைத்த கொண்டைக்கடலை அல்லது பிற பருப்புக்களுடன், கடுகு, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் தாளித்து சேர்த்து கிளறி விற்கப்படும் இந்த சுண்டல் புரோட்டீன் அதிகம் நிறைந்த ஒரு ருசியான ஸ்நாக்ஸ். விளையாட்டு வீரர்களுக்கு இது மிகவும் சிறந்த ஸ்நாக்ஸும் கூட.
2. கொத்து பரோட்டா
சென்னையின் பிரபலமான மற்றொரு சுவையான உணவு தான் கொத்து பரோட்டா. இந்த கொத்து பரோட்டா என்பது சூடான தோசைக் கல்லில் பரோட்டாக்களை பிச்சுப்போட்டு, அத்துடன் முட்டை, காய்கறிகள் மற்றும் சிக்கன் காரக்குழம்பு ஆகியவற்றை சேர்த்து கரண்டியால் பரோட்டாவை நன்கு கொத்திவிடுவார்கள். இது வயிறு நிரம்பும் உணவாக இருந்தாலும், சிஎஸ்கே வீரர்கள் தங்களின் பரபரப்பான ஐபிஎல் போட்டி அட்டவணையின் போது, டயட்டிற்கு ஒருநாள் லீவு விட்டு ஒருமுறை இதை விரும்பி உண்ணலாம்.
3. முறுக்கு சாண்ட்விச், பஜ்ஜி, போண்டா
சென்னையின் தெருவோர உணவு வகைகளில், முறுக்கு சாண்ட்விச் போன்ற ஒரு புதுமையான ஃபியூஷன் உணவுகளும் அடங்கும். இந்த மொறுமொறுப்பான மற்றும் காரசாரமான சாண்ட்விச்சானது இரண்டு முறுக்குகளுக்கு நடுவே சட்னி மற்றும் காய்கறிகளை வைத்து செய்வதால், இது ஒரு தனித்துவமான சுவையைத் தரும். இது தவிர சிஎஸ்கே வீரர்கள் பஜ்ஜி, போண்டா போன்றவற்றையும் ட்ரை செய்யலாம். இதுவும் மிகச்சிறந்த ஒரு மாலை நேர சிற்றுண்டிகளாகும்.
4. ஜிகர்தண்டா
கொளுத்தும் கோடை காலத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதால், சென்னையின் வெப்பமான காலநிலைக்குப் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அருந்த தோன்றும். அப்போது ஜிகர்தண்டா ஒரு சிறந்த தேர்வாகும். தமிழ்நாட்டின் மதுரையில் மிகவும் பிரபலமான இந்த பானம் பால், பாதாம் பிசின், சர்சபரில்லா சிரப் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது உடலைக் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதால், தீவிரமான போட்டிகளுக்கு பின் சிஎஸ்கே வீரர்கள் இதை பருகினால் இதமாக இருக்கும்.
5. ஃபில்டர் காபி
பாரம்பரிய தென்னிந்திய ஃபில்டர் காபி இல்லாமல், சென்னையில் எந்தவொரு உணவுப் பயணமும் முழுமையடையாது. ஸ்டீல் டம்ளரில் சூடான மற்றும் நுரையுடன் பரிமாறப்படும் இந்த நறுமணமிக்க பானம், அதன் வலுவான சுவை மற்றும் புத்துணர்ச்சிக்காக விரும்பப்படுகிறது. உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்க விரும்பினால், ஒரு கப் ஃபில்டர் காபியை குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications
