Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
IPL 2026: இந்த ஆண்டின் சிஎஸ்கே அணியில் உள்ள மிகச்சிறந்த 5 வீரர்கள்! இவர்களால் ஆட்டமே அதிரடியா இருக்கப்போகுது!
IPL 2026: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பல வலுவான வீரர்களுடன் களமிறங்கவுள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாகவே மோசமான விளையாட்டை விளையாடி பிளேஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு சிஎஸ்கே அணியில் சில புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்களின் வருகையால் சிஎஸ்கே அணியின் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.

ஆனால் இதுவரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜா, இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ரவீந்திர ஜடேஜா இல்லாதது பலருக்கு வருத்ததை தரலாம். ஆனால் இந்த ஆண்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டுள்ளார். இப்போது 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் உள்ள டாப் 5 வீரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஆயுஷ் மத்ரே
ஐபிஎல் தொடரில் உள்ள இளம் வீரர்களுள் ஒருவர் தான் ஆயுஷ் மத்ரே. 18 வயதான இவர் கடந்த ஆண்டு முதலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அதுவும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார். அதற்கு ஏற்ப அவர் 7 போட்டிகளில் விளையாடி 240 ரன்களை எடுத்தார். சமீபத்தில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து, இவரது தலைமையில் உலக கோப்பையையும் இந்திய அணி வென்றது. இப்படிப்பட்ட வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டாவது முறையாக விளையாடவுள்ளார். இதனால் நிச்சயம் இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு இவர் பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நூர் அகமது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள மிகச்சிறந்த பந்துவீச்சாளர் தான் நூர் அகமது. இது கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றுள்ள நிலையில், நூர் அகமதுவிற்கு பொறுப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான எம். ஏ. சிதம்பரம் மைதானம் 'சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற சொர்க்கபூமி' என்று அறியப்படுகிறது. எனவே இந்த ஆண்டு சிஎஸ்கே கோப்பையை வெல்ல அணியின் முதன்மைச் சுழற்பந்துவீச்சாளராக நூர் முகமதுவிற்கு பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் தான் ருதுராஜ் கெய்க்வாட். சிஎஸ்கே 5 முறை சாம்பியன் வென்றதில், இரண்டு தொடரில் இவர் முக்கிய பங்கை வகித்துள்ளார். அதுவும் 2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரை வென்ற போது இவர் ஆரஞ்சு தொப்பியை பெற்றார். இந்த ஆண்டு அணியில் பல மாற்றங்களுடன், புதிய இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டிருப்பதால், இவரது தலைமைத்துவமும் பேட்டிங் திறன்களும் அணிக்கு மிகவும் முக்கியமானவையாக இருக்கக்கூடும்.
டுவால்ட் பிரெவிஸ்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டுவால்ட் பிரெவிஸ் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனார். ஆனால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி டுவால்ட் பிரெவிஸை தனது அணியில் தேர்ந்தெடுத்துள்ளது. இவர் குர்ஜப்னீத் சிங்கிற்கு சிறந்த மாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது அதிரடியான பேட்டிங், ஸ்கோரை அதிகரிக்கும் என்று சிஎஸ்கே அணி இவரை மத்திய வரிசையில் அனுப்ப வாய்ப்புள்ளது.
சஞ்சு சாம்சன்
2026 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம் என்றால் அது ஜடேஜா வேறு அணிக்கு சென்றதும், வேறு அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் சேர்ந்திருப்பதும் தான். இதனால் சிஎஸ்கேவின் ஜடேஜாவிற்கு என்றிருந்த தனி ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சன் தனது பேட்டிங்கால் சிஎஸ்கேவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சன் சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து 3 பெரிய ஸ்கோர்களை அடித்துள்ளார். அதுவும் இந்த போட்டிகளும் இந்தியாவிற்கு வாழ்வா சாவா போட்டிகளாகும். இப்படி மோசமான சூழ்நிலையில் இந்தியா இருந்த போது தனது அதிரடியான ஆட்டத்தால் ஸ்கோரை அதிகரித்ததோடு, இரண்டு போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். இவரது ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் சேர்ந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கும். சொல்லப்போனால் சஞ்சு சாம்சன் தனது சிறப்பான ஆட்டத்தால் சிஎஸ்கேவில் தோனிக்கு இணையான ரசிகர் பட்டாளத்தைப் பெற வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
