Latest Updates
-
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Trigrahi Yog On 02 April 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல், அடிக்கடி பலவிதமான யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் இந்த மீன ராசியில் நிதிமான் சனி பகவானும் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஏப்ரல் 02 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் சூரியன், சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இது தவிர சில ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இப்போது மீன ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் நிதி நன்மைகளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய், சூரியன், சனி ஆகியவற்றின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வதோடு, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். இருப்பினும் அவசரப்பட்டு எந்த முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய், சூரியன், சனி ஆகியவற்றின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வேவை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் முடிவெடுப்பதில் நிறைய குழப்பத்தை சந்திக்க நேரிடும். இதனால் பல நல்ல வாய்ப்புக்களையும் இழக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய், சூரியன், சனி ஆகியவற்றின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். வேலையிலும் தொழிலிலும் ஸ்திரத்தன்மை காணப்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

