Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
உடல் எடையை குறைக்க உதவும் ஆம்லெட் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-புதனின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான சேலம் ஸ்டைல் கதம்ப சட்னி ரெசிபி -
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி -
தமிழ்நாடு 234 தொகுதிகள் இருப்பதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க! -
தேங்காய் சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் -
செவ்வாய்-குருபகவான் உருவாக்கும் கேந்திர யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த 5 ராசிக்காரங்க யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிக்கும் அசாத்திய புத்திசாலிகளாம்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் தனித்துவமான ஆளுமையையும், பண்புகளையும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக சில ராசிகளில் பிறந்தவர்களிடம் மற்றவர்கள் பொய் கூறுவதை எளிதில் கண்டறியும் அசாத்திய திறன் நிறைந்திருக்கும். இந்த ராசிக்காரர்கள் எதிரில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்தே அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது உண்மையை சொல்கிறார்களா என்பதை எளிதில் கண்டறிபவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் திறனைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிகளில் பிறந்தவர்களை ஏமாற்றுவது என்பது மிகவும் கடினமானதாகும். இந்த ஆற்றல் அவர்களுக்கு பல சமயங்களில் சாதகமாகவும், சில சமயங்களில் பாதகமாகவும் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பொய்களை எளிதில் கண்டறியும் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் ஆழமான உணர்வுபூர்வமான பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு நெருக்கமான ஒருவர் பொய் கூறினால், அவர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அதை உடனடியாக கண்டறிந்து விடுவார்கள். ஏதேனும் தவறு நிகழும்போது அவர்களை எச்சரிக்கும் ஒரு இயல்பான உள்ளுணர்வு இவர்களிடம் உள்ளது. உங்கள் முகபாவனைகளில் வெளிப்படும் இயல்பான நேர்மையையும், உங்கள் நடத்தையில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் இவர்களால் எளிதில் கண்டறிந்துவிட முடியும்.
கன்னி
புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் இயல்பிலேயே அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் குணமுடையவர்களாக அறியப்படுகிறார்கள். நீங்கள் பொய் சொல்ல முற்படும்போது, இயல்பாகவே சில சிறிய தவறுகளையும் செய்வீர்கள், கன்னி ராசிக்காரர்கள் துல்லியமாக அந்த தவறுகளை கவனிப்பார்கள். உங்கள் கைகளின் அசைவுகள், உங்களுக்கு வியர்க்கிறதா, அல்லது அவர்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்க்கிறீர்களா என்பது போன்ற , உங்களின் ஒவ்வொரு சிறிய அசைவையும் அவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். ஒரு கன்னி ராசிக்காரரிடம் பொய் சொல்வது, சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது.
கும்பம்
கும்ப ராசியினர் மிகவும் அமைதியான ஆளுமைக் கொண்டவர்கள். இருப்பினு, அவர்களின் மனம் எப்போதும் மிகுந்த வேகமாகவும், கூர்மையாகவும் செயல்படும். எவ்வளவு அசாதாரண சூழ்நிலையிலும், மக்களின் உண்மையான சுயரூபத்தை ஊடுருவி அறியும் அசாத்திய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்கள் நீங்கள் பேசும் வார்த்தைகளை மிகத் தீவிரமாக தர்க்கரீதியாக ஆராய்ந்து பார்ப்பார்கள். உங்கள் பொய்களில் எந்த லாஜிக்கும் இல்லையெனில், நீங்கள் அவர்களை ஏமாற்ற முயல்கிறீர்கள் என்பதை எளிதில் அவர்கள் கண்டறிந்து விடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் ஆழ்ந்த மற்றும் ஊடுருவிப் பார்க்கும் பார்வைக்கு அறியப்படுகிறார்கள். அவர்கள் நடமாடும் பொய் கண்டுபிடிக்கும் கருவிகள் என்று தாராளமாக அழைக்கலாம். நீங்கள் அவர்களிடம் எதையாவது மறைக்கிறீர்கள் என்றால், உங்கள் கண்களைப் பார்ததே அவர்கள் அதை எளிதில் கண்டறிந்துவிடுவார்கள். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வலிமையானது, அதனால் அவர்களுக்கு வார்த்தைகளே தேவைப்படுவதில்லை. உங்கள் முகபாவனையில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றத்தைக் கொண்டே அவர்களால் உண்மையை வெளிக்கொணர முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அதிக உணர்திறன் கொண்டவர்கள். தங்களுக்கு எதிரே நிற்பவரின் ஆற்றலை அவர்களால் உடனடியாக உணர முடியும். நீங்கள் அவர்களிடம் பொய் சொன்னால், உங்கள் குரலில் வெளிப்படும் பதற்றத்தையோ அல்லது முகத்தில் தெரியும் கலக்கத்தையோ அவர்கள் சரியாக கவனித்து நீங்கள் பொய் சொல்வதை கண்டறிந்துவிடுவார்கள். அவர்கள் அமைதியாக இருந்து நீங்கள் சொல்வதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கலாம், ஆனால் நீங்கள் சொல்லும் பொய்யையும், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மிகத் துல்லியமாக கண்டறிந்து விடுவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












