Latest Updates
-
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
40 வயதிற்கு மேல் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டிய சைவ மற்றும் அசைவ உணவுகள்! - பட்டியலிடும் டாக்டர்!
Healthy Foods In Tamil: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுகள் பெரும் பங்கை வகிக்கின்றன. ஏனெனில் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உணவுகளில் நிறைந்துள்ளன.
உணவுகளை எடுத்துக் கொண்டால் காய்கறிகள், கீரைகள் போன்ற சைவ உணவுகளும், சிக்கன், மட்டன், இறால், மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளும் உள்ளன. ஆனால் இந்த இரு வகையான உணவுகளை பெரும்பாலும் தனித்தனியாகத் தான் சமைத்து சாப்பிடுவோம். சிலர் சைவ மற்றும் அசைவ உணவுகளை ஒன்றாக சாப்பிடுவார்கள்.

ஆனால் குறிப்பிட்ட சில சைவ மற்றும் அசைவ உணவுகளை ஒன்றாக சாப்பிட்டால், அது உடலில் பிரச்சனைகளை உண்டு பண்ணும். இருப்பினும் சில சைவ மற்றும் அசைவ உணவுகளை 40 வயதிற்கு மேல் உட்கொண்டால், இருமடங்கு பலன் கிடைக்கும் என்பது தெரியுமா? இதுக்குறித்து டாக்டர் பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "ஒரு சில நேரங்களில் ஒருசில அசைவ உணவுகளுடன் சைவ உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. அது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் ஒரு நற்செய்தி என்னவென்றால், குறிப்பிட்ட சில அசைவ உணவுடன் சைவ உணவை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு இரண்டு மடங்கு சத்து கிடைக்கும்." என்று கூறினார். அதோடு அப்படி எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட வேண்டும் என்று டாப் 5 உணவுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
1. இறால் மற்றும் முள்ளங்கி
"இறால் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான கடல் உணவு. அதுவும் இந்த இறாலில் கால்சியம் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த இறாலுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? என்ன தான் இறால் நிறைய சத்துக்கள் நிறைந்த கடல் உணவாக இருந்தாலும், அதில் உள்ள நச்சுக்களும் உடலில் சேரத் தான் செய்யும். இந்நிலையில் முள்ளங்கியை அத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, இறாலில் உள்ள நச்சுக்களை முள்ளங்கி அப்படியே உறிஞ்சி வெளியேற்றிவிடும். அது நம் மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்." என்று டாக்டர் கூறினார். எனவே அடுத்தமுறை இறாலை சமைத்தால், அத்துடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடுங்கள்.
2. மட்டன் மற்றும் பச்சை பப்பாளி
"மட்டனை சாப்பிட்ட பின், பச்சை பப்பாளியை பொரியல் செய்து சாப்பிடுங்கள். இப்படி எப்போதெல்லாம் மட்டனை சாப்பிடுகிறீர்களோ, அப்போதெல்லாம் பச்சை பப்பாளி பொரியலையும் சாப்பிடுவதனால், பப்பாளியில் உள்ள ஒருவகையான நொதி பொருள், மட்டனை மிருதுவாக்கி, எளிதில் செரிமானமடையச் செய்து, வயிற்று வலி வருவதைத் தடுக்கும்" என்று டாக்டர் கூறினார்.
3. சிக்கன் மற்றும் சௌசௌ
"சிக்கன் நல்லது தான், ஆனால் அது உடல் சூட்டை ஏற்படுத்தும். ஆனால் சௌசௌவை சிக்கனுடன் சேர்த்து சமைத்து சாப்பிடும் போது, அதிகளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த சௌசௌ, உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. எனவே சிக்கன் சாப்பிட்டு உடல் சூடு பிடித்தால், சிக்கனுடன் சௌசௌ சேர்த்து சாப்பிடுங்கள்" என்று டாக்டர் கூறினார்.
4. மீன் மற்றும் வெண்டைக்காய்
மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு என்றதுமே வாயில் எச்சில் ஊறும். அந்த மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிட வேண்டியது தான் வெண்டைக்காய். அதுவும் மீன் குழம்பை செய்து சாப்பிடும் போது, அத்துடன் வெண்டைக்காயை பொரியல் செய்து சாப்பிடுவதனால், அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை வயிற்றிற்குள் செல்லும் போது, அது வயிற்றில் ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, குழம்பில் உள்ள காரம் வயிற்றை தாக்காமல் பாதுகாக்கும். எனவே மீன் குழம்பு வைத்து சாப்பிடும் போது, வெண்டைக்காய் பொரியலையும் செய்து சாப்பிட மறந்துவிடாதீர்கள்.
5. முட்டை மற்றும் கீரைகள்
"முட்டையுடன், கீரையை சேர்த்து சாப்பிடுவது நல்லது. முட்டையின் உள்ள புரோட்டீனும், கீரையில் உள்ள இரும்புச்சத்தும் சேர்ந்து தான் ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. எனவே வாரத்திற்கு 2-3 முறை முட்டையும், கீரையும் சேர்ந்த பொரியலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை சைவத்துடன் அசைவ உணவுகளை சேர்த்து சாப்பிடாமல் இருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள காம்பினேஷன் உணவை தினமும் ஒன்று உங்கொண்டு வந்தாலே, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

