Latest Updates
-
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலை சமாளிக்க இந்த 5 செடிகள் போதும்… வீடே குளிர்ச்சியாகவும் செல்வமும் தானாக பெருகும்! -
நீட் மறுதேர்வு எப்போது? சிபிஐ அதிரடி கைதுக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
கண் ஆரோக்கியத்திற்கான சிறந்த தென்னிந்திய உணவுகளை பட்டியலிட்ட டாக்டர் ஆதித்ரேய வர்மன்!
Eye Health Foods In Tamil: கண்கள் நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். இந்த உலகை பார்த்து ரசிக்க கண்கள் தான் உதவி புரிகின்றன. இப்படிப்பட்ட கண்களில் தற்போது நிறைய பேர் இளம் வயதிலேயே கண் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது தான் முக்கியமான காரணம். இது மட்டுமின்றி கண்களுக்கு போதுமான ஓய்வையும் பலர் கொடுப்பதில்லை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் உட்கொள்வதில்லை.
சொல்லப்போனால் கண்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், மொபைல் உபயோகத்தைக் குறைத்து, உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்தி வந்தாலே போதும். கண்களில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்த்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதுவும் நமது தென்னிந்திய உணவுகள் சில கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? இதுக்குறித்து கண் மருத்துவரான டாக்டர் ஆதித்ரேய வர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "தென்னிந்திய உணவுகளுடன் லுடீன், வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் போன்ற சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, கண்களின் ஆரோக்கியம் மேம்படும். அதுவும் சாம்பாருடன் கீரை, தயிர் சாதத்துடன் பழங்கள், தோசையுடன் சட்னி போன்ற எளிய உணவுச் சேர்க்கைகளை உட்கொள்ளும் போது, அது கண் பார்வையை பாதுகாப்பதோடு, கண்களில் ஏற்படும் சோர்வையும் குறைக்க உதவுகிறது" என்று கூறினார். மேலும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில தென்னிந்திய உணவு சேர்க்கைகளையும் பகிர்ந்துள்ளார். அந்த உணவுகளாவன பின்வருமாறு:
1. சாம்பார் சாதம்
சாம்பார் சாதத்துடன் முருங்கைக்கீரை பொரியலை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் கண் ஆரோக்கியத்திற்கு தேவையான லுடீன் கிடைக்கும். இது விழித்திரையை நீல ஒளியின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதுடன், கண்புரை ஏற்படுவதையும் குறைக்கின்றன.
2. பிரியாணி
பிரியாணியுடன் கேரட் பச்சடி அல்லது வெங்காய பச்சடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் வைட்டமின் ஏ மற்றும் புரோபயோடிக்குகள் இருப்பதால், கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரியும்.
3. தயிர் சாதம்
தயிர் சாதம் சாப்பிடும் போது, அத்துடன் மாதுளை அல்லது வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் அழற்சி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
4. எலுமிச்சை சாதம்
எலுமிச்சை சாதத்துடன் வேர்க்கடலையை சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதனால் இதில் உள்ள வைட்டமின் ஈ கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இப்படி சாப்பிடுவதால் எலுமிச்சை சாதத்தின் சுவையும் பிரமாதமாக இருக்கும்.
5. தக்காளி சாதம்
தக்காளி சாதத்துடன் பசலைக்கீரையை பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால், சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த காம்பினேஷனில் சாப்பிடும் போது, நீல ஒளியின் பாதிப்பிலிருந்து கண்களை பாதுகாக்கும்.
6. இட்லி சாம்பார்
இட்லி ஒரு லைட் ஃபுட். சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் நெய், கண்களின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சத்தான வைட்டமின் ஏ உறிஞ்சுதலுக்கு பெரிதும் உதவி புரியும். எனவே எப்போதும் இட்லியுடன் தவறாமல் வெஜிடேபிள் சாம்பாரை சேர்த்து சாப்பிடுங்கள்.
7. தோசை
தோசையுடன் புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னியை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புக்கள், கண்களின் மேற்பரப்பிற்கு மிகவும் நல்லது என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி நாம் உண்ணும் உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்ளுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபுட் காம்பினேஷனில் உங்களுக்கு எந்த சாம்பினேஷன் ரொம்ப பிடிக்கும் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

