Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்த பழங்களில் ஒன்றை தினமும் கொஞ்சம் சாப்பிட்டால், கண்களில் பிரச்சனையே வராதாம்..!
நமது உடலைப் போன்றே கண்களின் செயல்பாட்டிற்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இந்த சத்துக்களை உணவுகளின் மூலமே பெற முடியும். அதுவும் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அந்த பழங்களை சாப்பிடுவது நல்லது.
Fruits For Eye Health: ஒருவருக்கு கண்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கண்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களும், போதுமான ஓய்வும் கிடைக்க வேண்டும். தற்போது நிறைய பேர் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டிவி போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது தான். குறிப்பாக பணிபுரிபவர்கள் இன்று பலரும் நேரம் காலம் பார்க்காமல் பல மணிநேரங்களாக தொடர்ந்து கணினி முன்பு நேரத்தை செலவிடுகிறார்கள். ஒருவேளை ஓய்வு கிடைத்தாலும், அந்த நேரங்களில் மொபைலை பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி, அதிக வேளைப்பளுவால் பலர் சரியாக சாப்பிடுவதும் இல்லை. இதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, கண் பார்வை பாதிக்கப்படுகிறது.

நமது உடலைப் போன்றே கண்களின் செயல்பாட்டிற்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இந்த சத்துக்களை உணவுகளின் மூலமே பெற முடியும். அதுவும் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அந்த பழங்களை அன்றாடம் உட்கொண்டு வந்தால், கண் பார்வை பிரச்சனைகளை தடுக்கப்பட்டு, கண்களின் ஆரோக்கியம் மேம்படும். இப்போது எந்த பழங்களை சாப்பிட்டால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்பதைக் காண்போம்.

ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கண்புரை பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், கண்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவிபுரிகிறது. எனவே கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள், ஆரஞ்சு பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது.

ஆப்ரிகாட்
ஆப்ரிகாட் பழத்தில் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளது. இது கண்களின் பார்வையை மேம்படுத்த அவசியமான சத்துக்களில் ஒன்றாகும். மேலும் ஆப்ரிகாட்டில் ஜிங்க், காப்பர், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளதால், இது மாகுலர் கண் சிதைவை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

அவகேடோ
அவகேடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழத்தில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்ற பொருட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை மாலை நேர பார்வையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக்கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கிறது. எனவே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து அவ்வப்போது குடியுங்கள்.

பப்பாளி
அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஒரே பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நொதிகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை விழித்திரையில் வரும் அதிகப்படியான ஒளியை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. கண் பார்வையை மேம்படுத்த விரும்புபவர்கள், பப்பாளியை தினமும் உட்கொண்டால், பார்வை மேம்படும்.

மாம்பழம்
கோடைக்கால பழமான மாம்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்தான வைட்டமின் ஏ என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கண்களின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, கண்களில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கிறது. உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் தான், அது கண்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது. எனவே மாம்பழம் உங்களுக்கு கிடைத்தால், அதை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

பெர்ரி பழங்கள்
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் சிறப்பான பழங்களாகும். இனிப்பும் புளிப்பும் கலந்த இப்பழங்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ரோடாப்சின்-மீளுருவாக்கம் பண்புகள் உள்ளன, இவை கண்களில் உள்ள இரத்த நாளங்களுக்கு ஆதரவை வழங்குகின்றனன. இது தவிர இவற்றில்அந்தேசையனின்கள் காணப்படுகின்றன. இவை விழித்திரையின் தமனிகளில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கின்றன.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக கண் வறட்சி பிரச்சனையை சந்திப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
