Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
உங்க கண்களில் இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் கண் மருத்துவர்!
World Sight Day 2025: உலகளவில் சுமார் 2.2 மில்லியன் கணக்கான மக்கள் ஏதாவது ஒரு வகையான கண் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதுவும் பெரும்பாலானோரின் வேலை கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றின் முன்பு இருப்பதால், கண் தொடர்பான பிரச்சனைகளை நிறைய பேர் சந்திக்கின்றனர். இது தவிர மொபைல் போன் புழக்கமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான கண் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
கண் பிரச்சனைகளுக்கு வெறும் மொபைல், கணினி பயன்பாடுகள் மட்டுமின்றி, ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளும் முக்கியமான காரணங்களாகும். ஏனெனில் நமது கண்கள் உடலின் பிற உறுப்புகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன. எனவே உடலின் மற்ற உறுப்புக்களில் பிரச்சனை இருந்தாலும், அதன் தாக்கம் கண்களிலும் தெரியும்.

கண்களில் பிரச்சனை இருந்தாலும், இன்னும் நிறைய பேர் கண் ஆரோக்கியத்தில் போதுமான அக்கறை காட்டுவதில்லை. இப்படி ஆரம்பத்திலேயே கண்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், பின் பார்வையை இழக்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம்.
இப்படிப்பட்ட கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 09 ஆம் தேதி உலக பார்வை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, கண் மருத்துவரான டாக்டர் கீர்த்தி மானே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத 5 தீவிர கண் பிரச்சனை தொடர்பான அறிகுறிகளை பகிர்ந்துள்ளார். இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றும் டாக்டர் குறிப்பிட்டுள்ளார்.
1. கண் சிவந்து போவது அல்லது கண்களில் நீர் வடிதல்
கண்கள் அடிக்கடி சிவந்து போகிறதா? அதுவும் ஏதாவது ஒன்றை பார்க்கும் போதோ அல்லது கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றை பயன்படுத்தும் போதோ, கண்களில் நீர் வடிவதோ அல்லது கண்களில் எரிச்சல் ஏற்பட தொடங்குகினாலோ, கண்களில் பிரச்சனை தீவிரமாக உள்ளது என்றும், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
2. கண் வலி அல்லது மங்கலான பார்வை
கண்களில் வலியோ அல்லது ஏதாவது ஒன்றை தொடர்ந்து பார்க்கும் போது பார்வை மங்கலாகவோ தொடங்கினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் டாக்டர் கீர்த்தி கூறினார்.
3. முன்பக்க தலைவலி
உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமா? அதுவும் நாள் முழுவதும் வேலை செய்து, அந்த தலைவலியானது முன்பக்க நெற்றியில், புருவங்களைச் சுற்றியும், புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலும் ஏற்பட்டால், அது ஒற்றைத் தலைவலியுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே அடிக்கடி இப்படியான தலைவலியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் டாக்டர் கூறினார்.
4. கண் முன் ஏதாவது மிதப்பவை
கண்களுக்கு முன் ஏதாவது மிதப்பது போன்று தெரிகிறதா? அதுவும் நல்ல பிரகாசமான வெள்ளை சுவர் அல்லது வெற்று இடத்தைப் பார்க்கும் போது கண்களுக்கு முன் ஏதாவது மிதந்து கொண்டிருப்பது போன்று தோன்றுகிறதா? அப்படியானால் உடனே மருத்துவரை சந்தித்து கண்களை பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
5. திடீர் பார்வை இழப்பு
திடீர் பார்வை இழப்பு என்பது உடனே கவனிக்க வேண்டிய ஒரு மருத்துவ அவசர நிலை. எனவே உங்களின் ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் திடீரென்று பார்வை குறைபாடு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர் கீர்த்தி கூறினார்.
எனவே நண்பர்களே! உங்கள் கண்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அறிகுறிகள் தெரிந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே கண் மருத்துவரை அணுகி, உங்கள் பார்வையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


