Latest Updates
-
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
2 ஆண்டுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை சீரான இடைவெளியில் மாற்றுகின்றன. கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சசக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகிற. 2026, ஏப்ரல் 2 அன்று, ஜோதிடரீதியாக ஒரு சக்திவாய்ந்த நிகழ்வு நடைபெற உள்ளது. செவ்வாய் கிரகம் தனது நிலையை மாற்றி மீன ராசிக்குள் நுழைய உள்ளது. இது ஜோதிடரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
செவ்வாய் ஏப்ரல் 02, பிற்பகல் 3:37 மணிக்கு மீன ராசியில் நுழைகிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், சூரியன் ஏற்கனவே மீன ராசியில் உள்ளது. இந்த கிரக இணைப்பு மங்கள ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது, செவ்வாயும் சூரியனும் ஒரே ராசியில் இணையும்போது இந்த யோகம் உருவாகிறது. இந்த கிரகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் கூடுதல் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த யோகம் சிறப்பான நன்மைகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் புதிய வாய்ப்புகளுடன் சேர்த்து, கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்களையும், புதிய வருமானத்திற்கான வழிகளையும் கண்டறியலாம். இந்த காலகட்டத்தில் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான முன்னேற்றங்களை அனுபவிப்பார்கள். குறிப்பாக, வெளிநாட்டுத் தொடர்புகளுடன் தொடர்புடைய வியாபாரமாக இருப்பின், அவற்றில் முன்னேற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காலகட்டத்தில் பொருளாதாரநிலை மேம்பட வாய்ப்புள்ளது. அவர்களின் புத்திக்கூர்மை வலுவடைவதால் அவர்கள் பல்வேறு வழிகளில் வருமானத்தைப் பெறலாம்.
வேலையில் அவர்களின் முயற்சிகள் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வேலையில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கும், மேலும் வணிகர்கள் வெவ்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், மேலும் அவர்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய உடல்நலக் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த யோகத்தால் தங்கள் தொழில் மற்றும் பணித்துறைகளில் முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். கடந்த காலத்தை விட தற்போது நிலை மேம்பட வாய்ப்புள்ளது,மேலும் வாகனம் அல்லது அசையாச் சொத்து வாங்குவதற்கான யோகங்களும் ஏற்படலாம். அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான பல வாய்ப்புகள் தேடிவர வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் தேடிவரலாம். வியாபாரம் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம்.
பெரும்பாலும் இந்த காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே நிலவி வந்த பழைய பிரச்சினைகள் இப்போது தீர்க்கப்படலாம். பல முடிக்கப்படாத விஷயங்களை இப்போது சரியாக முடிக்க முடியும். மாணவர்களுக்கும் இது சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
