For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

இந்தியாவில் 5000 ஆண்களுக்கு முன் தோன்றிய உடற்பயிற்சி தான் யோகாசனம். யோகாசனம் என்றால், மனதை அலையவிடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலையவிடாமல் இருக்கத் தான் யோகா செய்யும் போது கண்களை மூடிக் கொள்கின்றோம். யோகாசனங்களில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நன்மைகளை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு யோகாவும் ஒவ்வொரு விதமான செயல்முறையைக் கொண்டிருக்கும்.

இருப்பதிலேயே பத்மாசனம் என்ற யோகா தான் செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும், சிம்பிளாகவும் இருக்கும். இந்த யோகாசனம் செய்ய தினமும் 10 நிமிடங்கள் போதும். இந்த யோகாசனத்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். இப்போது பத்மாசனத்தை எப்படி செய்வது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடுப்பிற்கு நல்லது

இடுப்பிற்கு நல்லது

பத்மாசனம் செய்யும் போது இடுப்பு மற்றும் கணுக்கால்களில், இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், அவ்விடங்களை நீட்சியடையச் செய்யும்.

ரிலாக்ஸ் அடையச் செய்யும்

ரிலாக்ஸ் அடையச் செய்யும்

பத்மாசனம் செய்யும் போது ஒரே இடத்தில் அமர்ந்து, மனதை ஒருநிலைப்படுத்தி உடற்பயிற்சி செய்வதால், மனம் ரிலாக்ஸ் அடைந்து, மன அழுத்தத்தைப் போக்கும்.

விழிப்புணர்ச்சி

விழிப்புணர்ச்சி

பத்மாசனத்தை தினமும் செய்து வருவதன் மூலம் நமது மூளை நன்கு சீராக செயல்பட்டு, விழிப்புணர்வுடன் செயல்பட உதவும். இதனால் அலுவலகத்தில் நமது உற்பத்தி திறன் அதிகரித்து, நல்ல பெயரை வாங்கலாம்.

தண்டுவடத்திற்கு நல்லது

தண்டுவடத்திற்கு நல்லது

பத்மாசனம் செய்யும் போது, நேராக அமர்ந்து செய்வதால், அது தண்டுவடத்திற்கு நல்ல உடற்பயிற்சியாக அமைந்து, தண்டுவடத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகள்

பெண்கள் பத்மாசனம் செய்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மூட்டுகளுக்கு நல்லது

மூட்டுகளுக்கு நல்லது

பத்மாசனம் செய்யும் போது மூட்டுகளை மடக்கி செய்வதால், இது மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். மேலும் பத்மாசனம் செய்வதன் மூலம், அடிவயிறு மற்றும் இடுப்பெலும்பிற்கும் நல்லது.

பத்மாசனம் செய்யும் முறை

பத்மாசனம் செய்யும் முறை

முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். பின் வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் இடது காலின் தொடை மீது, குதிகால் வயிற்றை தொடும் அளவிற்கு வைக்கவும். இதேப்போல் மற்றொரு காலையும் மடக்கி, வலது காலின் தொடையின் மீது, வயிற்றை தொடும் அளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.

பின் நேராக அமர்ந்து, கண்களை மூடி கைகள் இரண்டையும் முட்டிகளின் மீது, உள்ளங்களை மேல் நோக்கியவாறு, கட்டை விரல், ஆள்காட்டி விரலைத் தொட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் 5 நிமிடம் மூச்சை உள் வாங்கி வெளியே விட்டவாறு அமர வேண்டும். பிறகு இதேப்போல் கால் மாற்றி மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Padmasana

Are you aware of the benefits of Padmasana? Though this posture seems very simple, it really isn't so easy to sit in this pose for long.
Story first published: Friday, March 6, 2015, 11:45 [IST]
Desktop Bottom Promotion