Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்...
Rathasali Arisi Kanji Recipe In Tamil: தற்போது வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. இப்படி வெயில் கொளுத்துவதால், உடல் வெப்பம் அதிகரித்து, உடல் சூடு பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுவார்கள். உங்களுக்கும் இப்படி உடல் சூடு பிடித்துள்ளதா? உடல் சூட்டைக் குறைக்க வேண்டுமா?
அப்படியானால் நமது பாரம்பரிய அரிசிகளுள் ஒன்றான ரத்தசாலி அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடியுங்கள். இந்த அரிசி கஞ்சியை வெயில் காலத்தில் தயாரித்துக் குடிக்கும் போது, உடல் சூட்டை குறைப்பது மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேறும் மற்றும் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் குறையும்.

உங்களுக்கு ரத்தசாலி அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரத்தசாலி அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரத்தசாலி அரிசி - 1 கப்
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மிளகு - 10
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* பச்சை பயறு - 25 கிராம்
* துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப் + தேவையான அளவு
* இரண்டாவது தேங்காய் பால் - 1 கப்
* முதல் தேங்காய் பால் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* மோர் - தேவையான அளவு
* சின்ன வெங்காயம் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ரத்தசாலி அரிசியை நீரில் 2 முறை கழுவி, பின் சுத்தமான
நீரை ஊற்றி, குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், பெருங்காயத் தூள், வெந்தயம்
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை பயறை சேர்த்து 1 நிமிடம் நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள ரத்தசாலி அரிசியை சேர்த்து 1 நிமிடம்
வறுக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 கப் நீரை ஊற்றி,
பின் இரண்டாவது தேங்காய் பாலை சேர்த்து கலந்து குக்கரை மூடி, 10
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு மசித்து கிளறி
விட வேண்டும்.
* பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, கஞ்சி மிகவும் கெட்டியாக
இருந்தால், தேவையான அளவு நீரை ஊற்றி, பின் 1 கப் முதல் தேங்காய் பாலை
ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி விட வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் மோர் சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயத்தை சேர்த்து கலந்தால், சுவையான ரத்தசாலி அரிசி கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications