Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Venus Nakshatra Transit On 22 June 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது சூரியன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ஜூன் 22 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றுகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சூரியன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு.

மறுபுறம் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார். இவ்விரு கிரகங்களும் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவது அரிய நிகழ்வாகும் மற்றும் சற்று சிறப்பானதாகவும் கருதப்படுகிறது.
இந்த கிரகங்களின் நட்சத்திர மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவையும், வாழ்வில் நேர்மறையான மாற்றங்களையும் காணவுள்ளனர். இப்போது ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
சூரிய-சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், எந்த ஒரு விஷயத்திலும் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்
சூரிய-சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நிதி நிலைமை எதிர்பாராத அளவில் மேம்படும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
சூரிய சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆளுமை மேம்படும். பேச்சும் செயலும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைகளை திறம்பட சரியான நேரத்தை செய்து முடிப்பார்கள். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



