Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
Mapillai Samba Arisi Poondu Kanji Recipe In Tamil: நீங்கள் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உணவில் நமது பாரம்பரிய அரிசி வகைகளான கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் மாப்பிள்ளை சம்பா அரிசி ஏராளமான சத்துக்களைக் கொண்டது.
குறிப்பாக இதில் இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை அதிகம் இருப்பதால், இது நரம்பு தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு ஆற்றலை தரும். இது தவிர இந்த அரிசியானது செரிமானத்தை மேம்படுத்தும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

இப்படிப்பட்ட அரிசியுடன் பூண்டு, தேங்காய் பால் சேர்த்து கஞ்சியாக தயாரித்து, காலையில் குடித்து வரும் போது, நீண்ட நேரம் வயிறு நிரம்பி கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறைந்து, எடை இழப்புக்கும் உதவி புரியும். மேலும் இந்த கஞ்சியை எடையை குறைக்க நினைப்பவர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
உங்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி பூண்டு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாப்பிள்ளை சம்பா அரிசி பூண்டு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாப்பிள்ளை சம்பா அரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* பூண்டு - 15 பல்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
* முதலில் 1/2 கப் மாப்பிள்ளை சம்பா அரிசியை மிக்சர் ஜாரில்
போட்டு, ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு 2 முறை கழுவி, சுத்தமான நீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள மாப்பிள்ளை சம்பா அரிசியை
ஊற வைத்த நீருடன் அப்படியே ஊற்ற வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை தட்டிப் போட வேண்டும்.
* அடுத்து அதில் வெந்தயம், 1 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி, 7-8 விசில் விட
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட
வேண்டும்.
* இறுதியாக 1 கப் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறினால், சுவையான
மாப்பிள்ளை சம்பா அரிசி பூண்டு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications