Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
Karuppu Kavuni Vegetable Kanji For Weight Loss In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அதற்காக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் டயட்டில் கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் இந்த அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து, தினமும் காலையில் 1 கப் குடித்து வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மேலும் இந்த அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து போன்றவை அதிகம் இருப்பதால், உடல் ஆரோக்கியமும் மேம்படும். குறிப்பாக இந்த பக்குவத்தில் கஞ்சியை தயாரித்து குடிக்கும் போது, ருசியாகவும் இருக்கும், சத்தானதும் கூட.

உங்களுக்கு கருப்பு கவுனி வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி வெஜிடேபிள் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கவுனி அரிசி - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* கேரட் - 1 (துருவியது)
* பூண்டு - 6 பல் (தட்டியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கருப்பு கவுனி அரிசியை இரவு தூங்குவதற்கு முன்பு நீரில்
2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 4 கப் நீரை ஊற்றி, குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* மறுநாள் காலையில் அரிசி ஊற வைத்த நீரை வடிகட்டி தனியாக எடுத்து
வைத்துக் கொண்டு, அரிசியை மட்டும் ஜாரில் போட்டு கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் அரைத்த அரிசியை சேர்த்து, அத்துடன் தனியாக எடுத்து
வைத்துள்ள அரிசி ஊற வைத்த நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், கீறி
வைத்துள்ள பச்சை மிளகாய், துருவிய கேரட்டை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து, 1
டீஸ்பூன் சீரகத்தை கைகளால் நன்கு நசுக்கி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் துருவிய தேங்காய் மற்றும்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறினால், சுவையான கருப்பு
கவுனி வெஜிடேபிள் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications