Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
உடல் சூட்டினால் அவதிப்படுறீங்களா? அஞ்சறைப் பெட்டியில் உள்ள இந்த விதைகளை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க..
Summer Health Tips In Tamil: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நிறைய பேர் உடல் சூட்டினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வர முயற்சிக்க வேண்டும். பொதுவாக உடல் சூட்டைக் குறைப்பதற்கு பழங்கள் மற்றும் ஜூஸ்களை தான் பெரும்பாலானோர் உட்கொள்வார்கள்.
ஆனால் உடல் சூட்டைக் குறைக்க அக்காலத்தில் நம் முன்னோர்கள் அஞ்சறைப் பெட்டியில் உள்ள விதைகளைத் தான் பயன்படுத்தினார்கள். ஏனெனில் இந்த விதைகளால் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. அதற்கு அந்த விதைகளை தினசரி உணவில் சேர்க்கலாம் அல்லது அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இல்லாவிட்டால் நீரில் ஊற வைத்தும் உட்கொள்ளலாம்.

சரி, சமையலறையில் உள்ள எந்த விதைகள் கோடையில் சந்திக்கும் உடல் சூட்டைக் குறைக்க உதவும் என்று நீங்கள் கேட்கலாம். கீழே உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில விதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த விதைகளைத் தெரிந்து கொண்டு, அவற்றை கோடையில் தினசரி உட்கொண்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
சீரகம்
சமையலறையில் மிகவும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் சீரகம். இந்த சீரகம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. அதுவும் சீரக நீரை கோடைக்காலத்தில் குடித்து வந்தால், அது உடல் வறட்சியைத் தடுப்பதோடு, வெப்பத்தால் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்த்து பாதுகாப்பளிக்கும். வாயு தொல்லை, வயிற்று உப்புச பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சீரக நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. அதுவும் கோடையில் சீரக நீரானது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, வெளியில் காலத்தில் நன்கு உணர வைக்கும்.
சோம்பு
அஞ்சறை பெட்டியில் உள்ள மற்றொரு பொருள் தான் சோம்பு. இந்த சிறிய விதை உடலை குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த விதைகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது உடலில் வெப்பம் தொடர்பான காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். பொதுவாக கோடைக்காலத்தில் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண கோளாறுகளால் நிறைய பேர் அவதிப்படுவார்கள். இதைத் தவிர்க்க சோம்பு விதைகளை அவ்வப்போது வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
வெந்தயம்
உடல் சூட்டு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அதுமட்டுமின்றி, வெந்தயமானது உடல் சூட்டினால் சந்திக்கும் அரிப்பு, கொப்புளங்கள், அசசௌரிகயத்தைக் குறைக்கும். இன்னும் சிறப்பான பலன்களைப் பெற, இரவு தூங்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, அந்நீருடன் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும்.
மல்லி விதைகள்
மல்லி விதைகளானது செரிமான பாதைகளை சுத்தம் செய்யவும், கோடையில் ஏற்படும் காயங்களைத் தடுக்கவும் உதவி புரியும். மேலும் மல்லி விதைக்கு உடலின் வெப்பத்தைக் குறைக்கும் திறன் உள்ளது. எனவே மல்லியை இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் அந்நீரை குடித்து வர, உடல் சூடு சட்டென்று குறையும். அதனால் தான் நம் முன்னோர்கள் சளி, காய்ச்சலின் போது சுக்கு மல்லி கசாயத்தை தயாரித்து குடித்தார்கள்.
துளசி விதைகள்
துளசி விதைகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரியும். எனவே கோடையில் அதிக உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள் துளசி விதைகளை நீரில் ஊற வைத்து, அததுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க, உடல் சூடு சட்டென குறையும். அதுமட்டுமின்றி, இந்த விதைகளானது மலச்சிக்கல், அசிடிட்டி மற்றும் சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




