Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
Pattani Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பட்டாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி பட்டாணியை சமைக்க சொல்வார்களா? ஆனால் பச்சை பட்டாணி சீசன் முடிந்துவிட்டது. வேண்டுமானால் காய்ந்த பட்டாணி கிடைக்கும். அந்த பட்டாணியை ஊற வைத்து குருமாவாக செய்தால், சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த பட்டாணியை சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக செய்யும் போது இன்னும் பிரமாதமாக இருக்கும்.

பட்டாணி குருமாவை பலவிதங்களில் செய்வார்கள். நீங்கள் தனித்துவமான சுவையில் குருமா செய்ய நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* பட்டை - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* காய்ந்த பச்சை பட்டாணி - 1 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 10
* தேங்காய் - 1/4 மூடி
* முந்திரி - 5
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காய்ந்த பட்டாணியை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன
வெங்காயம், தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, கொத்தமல்லி ஆகியவற்றை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
ஏலக்காய், கிராம்பு, பட்டை, கல்பாசி, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை சேர்த்து நன்கு
கிளறி, ஊற வைத்த பட்டாணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினாவை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி
தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு
சேர்த்து கலந்து, குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கினால், சுவையான
பட்டாணி குருமா தயார்.



Click it and Unblock the Notifications