For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்!

இதுவரை கொரோனா வைரஸானது பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மலின் வழியாக பரவும் என்று மருத்துவர்கள் கூறிக்கொண்டிருக்க, மறுபுறம் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பல தவறான கருத்துக்கள் பரவி வருகிறது.

|

உலக மக்களையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 3000-த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 30 பேர் இருந்த நிலையில், கேரளாவில் மூன்று பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் வேகமாகிக் கொண்டிருக்கிறது.

Foods Linked To Novel Coronavirus And The TRUTH!

இந்த கொடிய வைரஸ் ஒருவரை தாக்கினால், அது முதலில் சுவாச மண்டலத்தை தாக்கி, கடுமையான சுவாச பிரச்சனையை சந்திக்க வைத்து இறப்பை சந்திக்க வைக்கும். இதுவரை கொரோனா வைரஸானது பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மலின் வழியாக பரவும் என்று மருத்துவர்கள் கூறிக்கொண்டிருக்க, மறுபுறம் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பல தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அதில் குறிப்பாக கொரோனா வைரஸ் உணவுகள் வழியாகவும் பரவுகிறது என்ற புரளி மக்களிடையே பரவி வருகிறது. எனவே மக்கள் பலர் எந்த உணவை சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

MOST READ: இந்த பழக்கம் இருப்பவர்களை கொரோனா வைரஸ் வேகமா தாக்க வாய்ப்பிருக்காம்.. எச்சரிக்கையா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடல் உணவுகள் பாதுகாப்பானதா?

கடல் உணவுகள் பாதுகாப்பானதா?

முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சி மார்கெட்டில் இருந்து பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள இறைச்சி மார்கெட்டில் கோழி, ஆட்டிறைச்சி, கடல் உணவுகள், செம்மறி ஆடுகள், பன்றி இறைச்சிகள் மற்றும் பாம்புகள் போன்ற அனைத்து வகையான இறைச்சிகளும் விற்கப்படுகின்றன. இந்த காரணத்தினால், இந்தியாவில் உள்ள மக்கள் கடல் உணவை சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகத்தில் உள்ளனர். இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, கொரோனா வைரஸிற்கும், கடல் உணவுகளுக்கும் தொடர்வு ஏதும் இல்லாததால், இந்தியாவில் கடல் உணவை உண்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

MOST READ: கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் இந்திய மூலிகைகள்!

வௌவால் இறைச்சி கொரோனாவை உண்டாக்குமா?

வௌவால் இறைச்சி கொரோனாவை உண்டாக்குமா?

சமீபத்தில் சீனாவை சேர்ந்த ஒருவர் வௌவால் சூப் குடிப்பது போன்ற வீடியோவை எடுத்து தனது இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவானது கொரோனா வைரஸ் இறைச்சி மூலம் பரவுகிறது என்ற பல கூற்றுகளுக்கு வழிவகுத்ததுடன், ஆய்வாளர்களும் இது உண்மை என்று நம்புகின்றனர். கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் நோய் மற்றும் இது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவுகிறது. வௌவால் இறைச்சியால் கொரோனா வைரஸ் பரவுவதாக பல கூற்றுகள் கூறினாலும், எதுவும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கொரோனா வைரஸ், வௌவால் மற்றும் பாம்பிற்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா என்று சோதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

கொரோனாவைப் பரப்பும் 'கொரோனா பீர்'

கொரோனாவைப் பரப்பும் 'கொரோனா பீர்'

ஒரே பெயர் எதற்கும் வைத்துவிடக்கூடாது. அப்படி வைத்தால் போதும், நம் மக்கள் அதைப் பற்றி பல புரளிகளைப் பரப்பிவிடுவர். அப்படித் தான் கொரோனா என்ற பெயர் முதலில் பீருக்கு இருந்தது, தற்போது வைரஸிற்கும் வைத்துள்ளதால், இந்த பீர் கொரோனாவைப் பரப்பும் என்ற தவறான கருத்து மக்களிடையே பரவி வருகிறது. உண்மையில் கொரோனா என்பதற்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று பெயர். இந்த வைரஸ் கிரீடம் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால், இதற்கு கொரோனா வைரஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. இது தெரியாமல் நம் மக்கள் கொரோனா வைரஸுக்கும், பீருக்கும் முடிச்சு போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.

MOST READ: கொரோனா வைரஸ் பற்றி அதிவேகமாக பரவி வரும் சில தவறான தகவல்கள்!

கொரோனா வைரஸை பூண்டு அழிக்குமா?

கொரோனா வைரஸை பூண்டு அழிக்குமா?

பூண்டில் ஏராளமான கொடிய தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். பூண்டில் உள்ள ஆர்கானோசல்பர் என்னும் பொருள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், புற்றுநோயையே எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவை. இருப்பினும், பூண்டு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் என எந்த ஒரு அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை.

MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இறைச்சிகள் கொரோனா வைரஸை உண்டாக்குமா?

இறைச்சிகள் கொரோனா வைரஸை உண்டாக்குமா?

கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவுவதால், இறைச்சி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற தவறான கருத்து மக்களிடையே உலாவி வருகிறது. ஆனால் எப்போதும் உண்மை தெரியாமல் எதையும் பரப்பக்கூடாது. இதுவரை இறைச்சி உணவுகள் கொரோனா வைரஸை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. எனவே இந்தியாவில் அசைவ உணவுகளை சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது தான். ஆனால் அப்படி சாப்பிடும் இறைச்சியை சுத்தமாக கழுவி, நன்கு வேக வைத்து பின்னரே உட்கொள்ள வேண்டும். இப்படி சமைத்து உட்கொண்டால், எந்த ஒரு நோயும் இறைச்சியின் மூலம் பரவாது.

எனவே கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுக்குறித்த பல புரளிகளும் பரவும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு, உண்மை தெரியாமல் கண்மூடித்தனமாக எதையும் நம்பாமல், தெளிவுடனும் அச்சமின்றியும் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Linked To Novel Coronavirus And The TRUTH!

Here we listed some foods linked to novel coronavirus and the truth. Read on...
Desktop Bottom Promotion