Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!
Kothamalli Chinna Vengaya Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தான் செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் கொத்தமல்லியை வைத்து இந்த வித்தியாசமான சட்னி செய்யுங்கள். அதுவும் கொத்தமல்லி சட்னியை வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள்.
கொத்தமல்லி சட்னியை இப்படி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை வித்தியாசமானதாகவும், சூப்பராகவும் இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி கொத்தமல்லி சட்னியை செய்தால், அதற்குப்பின் பழைய சட்னியை மறந்து விடுவீர்கள். இதில் கூடுதலாக சேர்க்கும் அந்த ஸ்பெஷல் பொருள் எலுமிச்சைசாறு. இதனால் சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு இந்த கொத்தமல்லி வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 2 வர மிளகாய்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 10 சின்ன வெங்காயம்
- 1 கப் கொத்தமல்லித்தழை
- ¼ ஸ்பூன் புளிக்கரைசல்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- ஒரு கடாயைச் சூடாக்கி, அதில் ½ டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், அதில் உளுத்தம்பருப்பு, வர மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- பின்னர் அவற்றை ஒரு மிக்சர் ஜாருக்கு மாற்றி, தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில் மீதமுள்ள ½ டீஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.
- சின்ன வெங்காயம் நன்றாக வதங்கி தோல் சுருங்கும் வரை வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- கொத்தமல்லி சுருங்கத் தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, எஞ்சியிருக்கும் வெப்பத்திலேயே அது மேலும் சுருங்க விடவும். பின்னர் இதையும் மிக்சி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் புளிக் கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் மென்மையான விழுதாக அரைக்கவும். அவ்வளவுதான் சூப்பரான கொத்தமல்லி சின்ன வெங்காய சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
