Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21?
Eid-ul-Fitr 2026: இஸ்லாமிய சகோதரர்களின் மிகவும் முக்கியமான மற்றும் உலகம் முழுக்க கொண்டாடப்படும் பண்டிகையான ஈத் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இது புனித நோன்பு மாதமான ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த பெருநாளைக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மார்ச் 19 அல்லது 20 அன்று ஈத் அல்-பித்ர் கொண்டாடப்படுமா என்று பலர் சந்தேகித்து வருகின்றனர், ஏனெனில் ஒவ்வொரு பிறை தெரியும் சரியான தேதி மாறுகிறது. இதற்கு காரணம் இஸ்லாமிய நாட்காட்டி சூரியனைப் பின்பற்றாமல் சந்திரனைப் பின்பற்றுகிறது.
பொதுவாக ஷவ்வால் பிறை முதலில் வானத்தில் காணப்பட்டவுடன் ஈத் தொடங்குகிறது, இது ரமலானின் முடிவைக் குறிக்கிறது. பிறை ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்னர் காணப்படுகிறதா என்பதைப் பொறுத்து சரியான தேதி தீர்மானிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான தேதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை, மார்ச் 20 அன்று ஈத் அல்-பித்ர் கொண்டாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற நாடுகளில் ஈத் பண்டிகை
நாடுகளிடையே உள்ள நேர வேறுபாடுகள் காரணமாக, உலகம் முழுவதும் வெவ்வேறு நாட்களில் இது கொண்டாடப்படுவதும் இக்குழப்பத்திற்குக் காரணமாக அமைகிறது. ஈத் கொண்டாட்டங்களுக்கான துல்லியமான தேதிகளைத் தெளிவுபடுத்தும் வகையில், ஷவ்வால் மாதப் பிறை தென்படும் நாட்களைக் காட்டும் இரண்டு படங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் 'அல் காதிம்' வானியல் ஆய்வகம் வெளியிட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டின் ரம்ஜான் பண்டிகை எப்போது?
சர்வதேச வானியல் மையத்தின் கூற்றுப்படி, பிப்ரவரி 18-ஆம் தேதி நோன்பைத் தொடங்கிய நாடுகளில், ரம்ஜான் மாதத்தின் நிறைவைக் குறிக்கும் பிறை நிலவு மார்ச் 18-ஆம் தேதி தென்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் எப்போது ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது?
இந்தியாவில், ரமலான் நோன்பு பிப்ரவரி 19 அன்று தொடங்கியது.எனவே, மார்ச் 19 அன்று பிறை தென்பட்ட பிறகு, மார்ச் 20 அன்று ஈத் பண்டிகை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவில், பிப்ரவரி 17 அன்று பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாத்தின் மிகவும் புனிதமான இந்த மாதம் பிப்ரவரி 18 அன்று தொடங்கியது.
ஈத் பண்டிகைக்கான துல்லியமான இறுதித் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், வானில் பிறை தென்படாத பட்சத்தில், முஸ்லிம்கள் 30 நாட்கள் ரமலான் நோன்பை முழுமையாக நிறைவு செய்து, அடுத்த நாளில் ஈத் பண்டிகையைக் கொண்டாடுவர். புவியியல் அமைப்பு மற்றும் வானிலை நிலவரங்களைப் பொறுத்து பிறை தென்படும் நேரம் மாறுபடுவதால், பல்வேறு நாடுகளில் ஈத் பண்டிகை கொண்டாடப்படும் தேதிகளில் கால வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
சவூதி அரேபியா மற்றும் ஈரானில் எப்போது ரம்ஜான்?
சவூதி அரேபியா, தனியார் மற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு ஈத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மார்ச் 18 முதல் நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது. அங்கு ஈத் பண்டிகை மார்ச் 20 அன்று பரவலாகக் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்திலும், ரம்ஜான் பண்டிகை மார்ச் 20 அன்று கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷார்ஜா மற்றும் பிற அமீரகங்களைச் சேர்ந்த வானியல் பார்வையாளர்கள், மார்ச் 19-ஆம் தேதி பிற்பகுதியில் பிறை நிலவு தெளிவாகத் தென்படக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் போரில் ஈடுப்பட்டு வரும் ஈரானில் ரம்ஜான் பண்டிகை மார்ச் 19 அன்று கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
