Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்!
Masala Coconut Rice Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி வெட்ரைட்டி ரைஸ் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வெரைட்டி ரைஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் வெரைட்டி சாதத்தில் தேங்காய் சாதம் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் தேங்காய் சாதத்தை ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மசாலா தேங்காய் சாதத்தை செய்யுங்கள்.
இந்த காரசாரமான மசாலா தேங்காய் சாதம் வழக்கமான தேங்காய் சாதம் போல இருக்காது, இதில் சேர்க்கப்படும் சில பொருட்களால் இதன் வித்தியாசமானதாகவும், கிட்டதட்ட பிரியாணி சுவையிலும் இருக்கும். இந்த மசாலா தேங்காய் சாதம், சுவையானதாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

முக்கியமாக வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள், பிள்ளைகளுக்கு லன்ச் செய்து கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாதிரியான தேங்காய் சாதத்தை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர நேரத்தில் கைக்கொடுக்கும். முக்கியமாக தேங்காய் சாதம் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு மசாலா தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா தேங்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சமைத்த சாதம்
- 2 ஸ்பூன் சீரகம்
- 4 ஏலக்காய்
- 2 துண்டு இலவங்கப்பட்டை
- 3 கிராம்பு
- 1 பிரியாணி இலை
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 ஸ்பூன் கரம் மசாலா
மசாலா அரைக்க:
- 1 கப் துருவிய தேங்காய்
- 3 ஸ்பூன் புதினா இலைகள்
- 3 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 3 பச்சை மிளகாய்கள்
- 3 ஸ்பூன் தயிர்
செய்முறை:
- ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அரிசி குழையாமல் நன்கு வேகவைத்து, சாதத்தை சமைக்கவும். பின்னர் அதை ஒரு தட்டுக்கு மாற்றி ஆற வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் சீரகம், ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
- மசாலா வாசனை வரும் வரை வதக்கவும், பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை பிக்கும் வரை வதக்கவும்.
- அதன்பின் அரைத்த தேங்காய் விழுதையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- சமைத்த சாதம் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
மசாலா சாதத்தில் நன்கு படும்படி கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான
மசாலா தேங்காய் சாதம் ரெடி!
-



Click it and Unblock the Notifications