For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்!

இங்கு ஒரு ஆணின் நினைவாற்றலை மிகவும் மோசமாக பாதிக்கும் சில ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

புதிய ஆய்வு ஒன்றில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஒருவரது நினைவாற்றலை மோசமாக பாதிப்பதோடு, உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகளை தினமும் உட்கொண்டு வந்த ஒரு இளம் ஆணின் நினைவாற்றலை சோதித்த போது, அந்த ஆணின் நினைவாற்றல் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரு நாளைக்கு 16 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு உட்கொண்டு வந்த ஆணால் 12 வார்த்தைகள் அல்லது அதற்கும் மேலான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடிந்ததாம். அதேப் போல் 28 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு உட்கொண்டு வந்த ஆண்களால் 12 வார்த்தைக்கும் குறைவாகவே நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது.

Trans Fat Foods May Weaken Memory In Men

ட்ரான்ஸ் கொழுப்புக்கள் என்பவை கெட்ட கொழுப்புக்களாகும். இந்த கொழுப்புக்கள் ஒருவரது உடலில் அதிகமானால், அது உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களை குறைக்கும். அதே சமயம் இது உடலினுள் அழற்சியை உண்டாக்குவதோடு, ஹார்மோன் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலில் மூளையின் முறையான செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உற்பத்தியை தாமதப்படுத்தும். அதோடு இது ஒருவரது செரடோனின் அளவை பாதிப்பதோடு, பசி மற்றும் தூக்கத்தை சீராக்கும் ஹார்மோன்களையும் பாதிக்கும்.

சரி, இப்போது ஒரு ஆணின் நினைவாற்றலை மிகவும் மோசமாக பாதிக்கும் சில ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேக்குகள் மற்றும் குக்கீஸ்

கேக்குகள் மற்றும் குக்கீஸ்

உறைய வைக்கப்பட்ட கேக், பீஸ் மற்றும் குக்கீஸ் போன்ற உணவுப் பொருட்களில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் முழுமையாக நிறைந்துள்ளது. இன்று இது பலரால் விரும்பி சாப்பிடப்படும் உணவுப் பொருட்களாகும். உங்கள் நினைவாற்றல் மோசமாக இருப்பதற்கு முக்கிய காரணமே இந்த உணவுகள் தான். எனவே இந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

பிரெஞ்சு ப்ரைஸ்

பிரெஞ்சு ப்ரைஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி வாங்கி சாப்பிடும் உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பிரெஞ்சு ப்ரைஸ். இந்த பிரெஞ்சு ப்ரைஸில் ஆரோக்கியத்தை சீரழிக்கும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது உடல் பருமனை உண்டாக்குவதோடு, ஒருவரது உடல் எடையை அதிகரிக்கும்.

 பாப்கார்ன்

பாப்கார்ன்

பட்டர் ப்ளேவர் பாப்கார்ன் அல்லது சாதாரண பாப்கார்ன் என இரண்டிலுமே ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டர் பாப்கார்னில் 0.5 கிராம் ட்ரான்ஸ் கொழுப்புக்களும், காராமெல் பாப்கார்னில் 1.5 கிராம் ட்ரான்ஸ் கொழுப்புக்களும் உள்ளது. எனவே இதை வாங்கும் முன் பல முறை யோசித்துக் கொள்ளுங்கள்.

மார்கரைன்

மார்கரைன்

நீங்கள் மார்கரைனை அதிகமாக அடிக்கடி சாப்பிடுவீர்களா? எச்சரிக்கை. இதில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. மார்கரைன் க்ரீம் போன்று காணப்படுவதற்கு காரணம், அதில் ஹைட்ரஜன் நிறைந்த வெஜிடேபிள் ஆயில் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது தான். எனவே இந்த மார்கரைனை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

க்ரனோலா பார்கள்

க்ரனோலா பார்கள்

க்ரனோலா பார்கள் சாப்பிட அற்புதமாகவும், ருசியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த ப்ரனோலா பார்களில் முழுமையாக ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்துள்ளது என்பது தெரியுமா? உங்கள் க்ரனோலா பார்களை சாப்பிட விருப்பமாக இருந்தால், அதை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள்.

காபி க்ரீமர்

காபி க்ரீமர்

காபி குடிக்கும் போது நீங்கள் காபி க்ரீமரை அதிகம் பயன்படுத்துவீர்களா? காபி க்ரீமரில் பாதி கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்துள்ளது. இது இதய நோய், பக்க வாதம் மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே ஒரு நாளைக்கு 2 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பிற்கு மேல் உட்கொள்ள வேண்டாம்.

பிட்சா

பிட்சா

பெரும்பாலானோர் இரவு உணவை பிட்சா சாப்பிட்டு முடித்துக் கொள்கிறார்கள். அனைத்து வகையான பிட்சாக்களிலும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இதில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் இயற்கையாகவே அதிகம் நிறைந்துள்ளது. இந்த ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நல்லது தான். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே பர்கர், ஹாட் டாக்ஸ் போன்றவற்றில் சேர்க்கப்படும் மாட்டிறைச்சியை சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், உங்கள் நினைவாற்றலை விரைவில் இழந்துவிடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Trans Fat Foods May Weaken Memory In Men

Did you know trans fats food weaken memory loss in men? Here is a list of trans fat sources that will increase your bad cholesterol and lower good cholesterol.
Story first published: Monday, May 14, 2018, 12:34 [IST]
Desktop Bottom Promotion