ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையைத் தடுக்கும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

படுக்கையில் துணையுடன் உடலுறுவில் ஈடுபடும் போது, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ஆணுறுப்பிற்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பது தான். எனவே ஆண்கள் தங்களின் பாலியல் வாழ்க்கை பாழாகாமல் இருக்க, இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தின் மீது சற்று அக்கறை காட்ட வேண்டும்.

இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உடலில் தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருசில உணவுகள் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையைத் தடுக்கும் உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகளை ஆண்கள் உட்கொண்டு வந்தால், பாலியல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்ரூட் மற்றும் கீரைகளில் உள்ள நைட்ரேட்டுகள்

பீட்ரூட் மற்றும் கீரைகளில் உள்ள நைட்ரேட்டுகள்

பச்சை இலைக்காய்கறிகளான பசலைக்கீரை மற்றும் செலரி போன்றவற்றில் நைட்ரேட்டுகள் அதிகமான அளவில் உள்ளது. நைட்ரேட்டுகள் உடலில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும். அதேப் போல் பீட்ரூட் ஜூஸிலும் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, தலை முதல் கால் வரை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள்

டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள்

ஆய்வு ஒன்றில் டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஆண்கள் டார்க் சாக்லேட்டை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், ஆண்களுக்கு உள்ள பாலியல் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

பிஸ்தாவில் உள்ள புரோட்டீன்கள்

பிஸ்தாவில் உள்ள புரோட்டீன்கள்

சமீபத்திய ஆய்வு ஒன்றில் விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும் ஆண்கள், தினமும் பிஸ்தாவை ஒரு கையளவு என 3 வாரம் உட்கொண்டு வந்தால், ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகள் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பிஸ்தாவில் இருக்கும் அர்ஜினைன் என்னும் புரோட்டீன், இரத்த குழாய்களை ரிலாக்ஸ் அடையச் செய்து விறைப்புத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்கிறது.

கடல் சிப்பியில் உள்ள ஜிங்க்

கடல் சிப்பியில் உள்ள ஜிங்க்

கடல் சிப்பியில் இருக்கும் ஜிங்க், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு மற்றொரு காரணமான ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை மேம்படுத்தும்.

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்

தர்பூசணி ஓர் நேச்சுரல் வயகரா போன்று செயல்படும். தர்பூசணியில் உள்ள பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, இரத்த நாளங்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, ரிலாக்ஸ் அடையச் செய்து, விறைப்புத்தன்மை பிரச்சனையைத் தடுக்கும்.

தக்காளியில் உள்ள லைகோபைன்

தக்காளியில் உள்ள லைகோபைன்

லைகோபைனும் ஒரு வகையான பைட்டோநியூட்ரியண்ட். இந்த பைட்டோநியூட்ரியண்ட் அடர் சிவப்பு நிற பழங்களான தக்காளி, பிங்க் நிற கிரேப்ஃபுரூட் போன்றவற்றில் உள்ளது. மேலும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nutrients That Fight Erectile Dysfunction

There's no miracle food to prevent erectile dysfunction. However, there is some evidence that certain foods may help.
Story first published: Thursday, September 1, 2016, 14:14 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter