இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

டெங்கு, மலேரியா போன்ற கொடிய காய்ச்சலால் அவஸ்தைப்படும் போது, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் காரணமாக உயிரையே இழக்க நேரிடும்.

பொதுவாக காயம் ஏற்படும் போது, இரத்தத் தட்டுக்கள் தான் அதிகளவு இரத்தம் வெளியேறாமல் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்கும். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 150,000 முதல் 450,000 இரத்தத்தட்டுகள் இருக்கும்.

இங்கு இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிவி

கிவி

கிவி பழம் இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும். இது வெளிநாட்டு பழமாக இருந்தாலும், தற்போது நம் நாட்டில் ஒவ்வொரு சூப்பர் மார்கெட்டிலும் எளிதில் கிடைக்கிறது.

இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள், கிவி பழத்தை தினமும் 2 சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முக்கியமாக இந்த பழத்தை இரத்த சோகை இருப்பவர்கள், வைட்டமின் பி குறைபாடுள்ளவர்கள் மற்றும் இதர வைரல் நோய்த்தொற்றுக்களால் அவஸ்தைப்படுபவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ட்ராகன் பழம்

ட்ராகன் பழம்

ட்ராகன் பழமும் அனைத்து சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்கும். இந்த பழம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள இரத்தத்தட்டுக்களின் அளவை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் தான் காரணம்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள அல்புமின், இரத்த பிளாஸ்மாவில் உள்ள அத்தியாவசிய புரோட்டீன் ஆகும். இது இரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள வளமான அளவிலான கால்சியம், இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்க உதவும். உடலில் போதுமான அளவில் கால்சியம் இல்லாவிட்டால், காயத்தின் போது இரத்தம் உறைய நீண்ட நேரம் ஆகும்.

பப்பாளி இலை

பப்பாளி இலை

பப்பாளி இலையில் உள்ள நொதிகளான ஹீமோபாப்பைன் மற்றும் பாப்பைன், இரத்தத் தட்டுக்களின் அளவை வேகமாக மேம்படுத்தும். அதற்கு பப்பாளி இலையை நீரில் போட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.

மாதுளை

மாதுளை

மாதுளம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுக்களின் அளவு அதிகரிக்கும். எனவே இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க மாதுளையை தினமும் சிறிது சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Can Help In Increasing Platelet Count

Here are some foods that can help in increasing platelet count. Read on to know more...
Story first published: Monday, September 26, 2016, 15:36 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter